google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: பொம்மை

Monday, June 7, 2010

பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை அதைக்

கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

சதியின் முன்னே தர்மமே பொம்மை

சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை (நீயும்)

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

இன்பச் சோலையில் இயற்கை பொம்மை அந்த

இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை (நீயும்)

No comments: