நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாகப் பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான நோய்கள் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் ஏற்படுகின்றன. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததால் ஏற்படுகின்றன. நாம் நம் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதின் மூலம் இவ்வகை நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment