google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Skylab Palaniappan
Showing posts with label Skylab Palaniappan. Show all posts
Showing posts with label Skylab Palaniappan. Show all posts

Sunday, January 9, 2011

Oosi Oosithan



அழிக்கும் தொழில் செய்யும் கடவுள் சிவன்;
அயராது காக்கும் தொழிலுடையார் டாக்டர் சதாசிவம். 
அருமைமிகு பொன்னமராவதியின் 
பெருமைமிகு டாக்டர் இவர்.


ஆறுமுகத்திற்கு வந்தது கடுங் காய்ச்சல்;  டாக்டரை 
அவசரமாய்ப் போய்ப் பார்த்தார் சளி அவதியுடன். 
சளிநிறை நெஞ்சுடன் மட்டுமல்ல; 
சரியான நம்பிக்கை மனதுடனும்தான். 


ஏறுநடை ஏர்போர்ஸ் வீரா! என்னாயிற்று?
என்று ஏற்றினார் இரண்டு ஊசி அடுத்தடுத்து .
தொலைந்தது காய்ச்சல் அக்கணமே;  பின்பு 
ஒழிந்தது சளி என்னும் சனி மெதுவாகவே 


அழிக்கும் தொழில் செய்யும் கடவுள் சிவன்;
விழிப்புடன் காப்பவரோ டாக்டர் சதாசிவம்.
அவர் வாழ்க; அவர் போடும் ஊசி வாழ்க;
அனைவரும் வாழ்க! வாழ்கவே!



(ஆறுமுகம் என்பவர் பொன்.புதுப்பட்டி தகரக்கடை (தகரவேலை) மு. நடராசன் ஆச்சாரி என்னும் கடும் உழைப்பாளியின் மகன் ஆவார். இவரே ஸ்கைலேப் பழனியப்பன் என்னும் அருமைத் தம்பியை உடையவர்.)



(N. Arumugham is the son of a hard working tinsmith, Mr. M. Natarajan Achari, of PON. Puduppatti. He has a nice younger brother, popularly called Skylab Palaniappan.)