Tuesday, June 15, 2010

நெருஞ்சி முள் (நெருஞ்சில்)

தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.
கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி. மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.
இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர். பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.
இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து . காமவர்த்தினி.ஆண்மை பெருக்கி. பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.
சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவை குணத்தில் மாறுபடுவதில்லை.
இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , ஆண்மைப்பெருக்கி.
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கும்.


Botanical Name Tribulus terrestris L.
Family ZYGOPHYLLACEAE
Habit Herb
Used In Ayurveda, Folk, Homeopathy, Tibetian, Unani and Sidha

The whole plant of Goksura is used in the form decoction and powder to treat consumption, calculi, intrinsic haemorrhage, dysuria, to promote hair-growth, arthritis rejuvinative and as an aphrodisiac. Consumption Powder of goksura fruits and asvagandha(Withania somnifera) mixed with honey is taken with milk.

Various Names:

Arabic:

 • Bastitaj, Busteyrumi, Khasak


Bengali:

 • Kanta Gokhur


English:

 • Devil S Thorn, Caltrops


Hindi:

 • Burragokhur, Chhotagokhru, Chota-Gokhru, Gokharu, Gokhru, Gokhuru, Gokshri, Hatechanghara, Hussuk, Kanti, Goghru, Pili-Kante


Homeopathy: Tribulus Terrestris


Kannada:

 • Negalu, Negil-Mullu, Sennanegalu, Nerinjimullu, Sannaneggilugida, Govina Mullu, Neggilu, Nerigilu, Sanna Neggilu, Kirineglu Mullu, Naegalu Mullu, Naeggila Mullu, Neggila Mullu, Neglumullu


Malayalam:

 • Neringil, Nerinnil, Nerungil


Marathi:

 • Gokru, Sarata, Ghokaru, Lahanagokharu, Sharatte, Ghokaroo, Kaante Gokharoo, Sarate


Persian:

 • Kharekhasak, Khussuck


Sanskrit:

 • Shadanga, Bahukantaka, Bhakshataka, Canadruma, Chanadruma, Gokanta, Gokantaka, Gokantakah, Gokhura, Gokhurha, Gokshua, Gokshura, Gokshuru, Goksura, Goksurah, Goksuraka, Ikshugandha, Iksugandhika, Kanta, Kantaphala, Kshudragokshura, Kshudrakshura, Kshura, Laghugokshura, Laghugoksuru, Palankasha, Ractasuadanshtra, Sadanga, Sadangah, Shvadanshtra, Soodumstra, Sthalashringataka, Sthalasringataka, Sudumstra, Svadamstra, Svadukantaka, Svadunestra, Traikantaka, Trikantah, Trikantaka, Vanashringataka, Vanasrangata, Ri


Tamil:

 • Nerinci, Nerunji, Sirunerinji, Kamaraci, Neruncil, Peru Neruncil, Nerunci, Acuvacattiram, Cineruncil, Citiram, Cutam, Cuvatattam, Cuvatukantam, Kokantam, Kontam, Nerunciputum, Tirikantakam, Tirikantam, Tiritantam, Nerunjul, Nerungil, Nal Nenuncil, Cherunerinche, Nerinjal, Nerinji, Nerunjil, Neringie, Nerenjimullu, Palleru, Ciruneruncil, Acacaram1, Acacuram1, Accuram2, Acuvacettiram, Acuvatattiram, Akkavalati, Akkilu, Akkini 2, Akkinil, Antaravaruni, Antaravarunikkoti, Nerunchil, Cucumam, Cukam@, Cutakakkoti, Cutakam, Cuvatukantakam2, Cuvatukantakkoti, Cuvatukantam2, Ikkukantai3, Inki, Inkucakkanan2, Inkucukantan@, Inkucukantan2, Inkucukkantan2, Inkukkantan2, Inkutavakam, Irattaccemi, Itcukantam2, Kamaracikkoti, Kamarici, Kanatanti, Katutatinetti, Kittiram, Kokanamul, Kokanamutkoti, Kokantakam, Kokkurapputu, Kontakakkoti, Kontakam, Kontam1, Kotimakitam, Kurukku, Matipam, Matipoti, Matipoti#, Matipoti@, Mattuppoti, Ororutali, Pacanapeti 2, Paramatarai, Patalamulam 3, Patalamuli 3, Patamuli, Piruntai 2, Tirikalatakam, Tirikantaki, Tirikantakkoti, Tirikantam#, Tirikantam@, Tiruvarttaivattam, Tumpu, Mukkantakam, Mukkantaki, Mukkantali, Nallaneruncil, Nalnerunci, Nalneruncil, Nannerincil, Nanneruncikkoti, Nattuvarikam, Nayppanippuntu, Neruncippaccai, Viruccalapam, Viruccalayi, Virukkalapam, Yanaikkalvananki, Yanaikkalvanankipputu, Yanaivananki 2, Ucaripam, Ucaritam, Uccitakkoti, Uccitam


Telugu:

 • Chirupalleru, Cinnapalleru, Nirunji, Palleru, Pallerumullu, Sannaneggilugida, Pannaeru Mullu


Tibetan:

 • Gze Ma, Gze-Ma


Urdu:

 • Gokharu, Khar-E-Khasak-Khurd, Gokhru Khurd, Gokhru Khurd Nim Kofta
7 comments:

 1. i found u have written such a amazing blog.
  thanks a lot..

  ReplyDelete
 2. Would have been grateful if the picture of the herb is shown

  ReplyDelete
 3. Osm blog ...tq!!��

  ReplyDelete

Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?