- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் ஆதிபராசக்தியே போற்றி
- ஓம் அபிராமவல்லியே போற்றி
- ஓம் ஆயிரங்கண்ணியே போற்றி
- ஓம் அம்பிகைத்தாயே போற்றி
- ஓம் ஆசைகளை நிறைவேற்றுவாய் போற்றி
- ஓம் ஆன்பின் உருவே போற்றி
- ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
- ஓம் ஆச்சம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
- ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
- ஓம் இமயவல்லியே போற்றி
- ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
- ஓம் இருசுடர் ஒளியே போற்றி
- ஓம் இருளை நீக்குவாய் போற்றி
- ஓம் ஈசனின் பாதியே போற்றி
- ஓம் ஈஸ்வரிதேவியே போற்றி
- ஓம் உமையெனும் அன்னையே போற்றி
- ஓம் உற்சாகம் அளிப்போய் போற்றி
- ஓம் உண்மையின் பொருளே போற்றி
- ஓம் உன்னதவரம் தருவாய் போற்றி
- ஓம் ஊக்கம் அளிப்பவளே போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் என் வழி துணையே போற்றி
- ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் எம்பிராட்டி அம்மையே போற்றி
- ஓம் ஏற்றம் அளிப்பாய்போற்றி போற்றி
- ஓம் ஐமுகன் துணையே போற்றி
- ஓம் ஐயங்கள் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஒளிரும் முகத்தவனே போற்றி
- ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
- ஓம் கயிலையான் துணைவியே போற்றி
- ஓம் காமாட்சி தேவியே போற்றி
- ஓம் கடாட்சம் தருபவளே போற்றி
- ஓம் காவல் தெய்வமே போற்றி
- ஓம் கருணை தெய்வமே போற்றி
- ஓம் கண்ணியத்தின் வடிவே போற்றி
- ஓம் கற்பூர நாயகியே போற்றி
- ஓம் கற்பினைக் காப்பாய் போற்றி
- ஓம் கலாவல்லியே போற்றி
- ஓம் கிரிபோல் உயர்ந்தவளே போற்றி
- ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
- ஓம் கூர்மதி தருவாய் போற்றி
- ஓம் குவலய நாயகியே போற்றி
- ஓம் குலத்தைக் காப்பவளே போற்றி
- ஓம் குமரனின் தாயே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
- ஓம் கொற்றவை தெய்வமே போற்றி
- ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கோமதித்தாயே போற்றி
- ஓம் கோள்களை அடக்குவாய் போற்றி
- ஓம் சுங்கமிக்கும் கடலே போற்றி
- ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
- ஓம் சநதோஷம் அளிப்பவளே போற்றி
- ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
- ஓம் சக்தித்தாயே போற்றி
- ஓம் சாபம் களைவாய் போற்றி
- ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி
- ஓம் சீற்றம் தணிப்பாய் போற்றி
- ஓம் சிறுநகை புரிபவனே போற்றி
- ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
- ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
- ஓம் செங்கதிர் ஒளியே போற்றி
- ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
- ஓம் சேமசுந்தரியே போற்றி
- ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
- ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
- ஓம் தாயே தந்கையே போற்றி
- ஓம் திருவருள் புரிவாய் போற்றி
- ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
- ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
- ஓம் திரிசூலம் கொண்டவளே போற்றி
- ஓம் திசையெட்டும் காப்பாய் போற்றி
- ஓம் தீரம் அளிப்பவளே போற்றி
- ஓம் துர்க்காதேவியே போற்றி
- ஓம் துன்பம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் துணிவினை தருவாய் போற்றி
- ஓம் தூயமனம் கொடுப்பாய் போற்றி
- ஓம் நாராயணியே போற்றி
- ஓம் நலங்கள் அளிப்பாய போற்றி;
- ஓம் நித்யக்கல்யாணியே போற்றி
- ஓம் நீதியைக் காப்பாய் போற்றி
- ஓம் பகவதிதேவியே போற்றி
- ஓம் பசுபதி நாயகியே போற்றி
- ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
- ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
- ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
- ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
- ஓம் பூஜிக்க அருள்பவளே போற்றி
- ஓம் பொன்னிறத்தாயே போற்றி
- ஓம் போகங்கள் தருவாய் போற்றி
- ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி
- ஓம் மலைமகள் தாயே போற்றி
- ஓம் மாதங்கி அன்னையே போற்றி
- ஓம் மகமாயி தாயே போற்றி
- ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
- ஓம் மாலவன் தங்கையே போற்றி
- ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
- ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
- ஓம் வேதவல்லியே போற்றி
- ஓம் வித்தைக்கு அரசியே போற்றி
- ஓம் விளக்கின் ஒளியே போற்றி
- ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
- ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
- ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
Showing posts with label Thurkkaiamman 108 Potri. Show all posts
Showing posts with label Thurkkaiamman 108 Potri. Show all posts
Friday, December 17, 2010
Durga108 Potri
Subscribe to:
Posts (Atom)