google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று

Tuesday, June 15, 2010

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று


நம் உடலிலிருந்து ‌தேவைய‌ற்ற தாது உ‌ப்பு‌க்களை சிறு‌நீரக‌ம் ‌சிறு‌நீ‌ர் மூலமாக வெ‌ளியே‌ற்று‌கிறது. நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ன் மூலமாக நமது உட‌லி‌ல் சேரு‌ம் அ‌திக‌ப்படியான உப்புகள் மற்றும் கழிவுகள் மட்டுமே ‌சிறு‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருக்கும். எனவே, ‌‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் அ‌ல்லது ‌சிறு‌நீரக‌ப் பாதை‌யி‌ல் தொ‌ற்று ஏ‌ற்படு‌‌கிறது எ‌ன்றா‌ல், அது வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து செ‌ல்லு‌ம் ‌கிரு‌மிகளா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌ம்.
ஜீரணப் பாதையில் உள்ள சில பாக்டீரியாக்களாலும் சிறுநீர் வெளியேறும் குழாயில் தொற்று ஏற்படுவதாலும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக யூடிஐ - யூரினரி டிராக்ட் இன்ஃபக்ஷன் என்று பெயர்.
‌பிற‌ப்புறு‌ப்பை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு, பு‌திதாக ‌திருமணமான பெ‌ண்க‌‌ளி‌ல் ‌சிலரு‌க்கு, வேறு ‌சில நோ‌ய்‌க் கார‌ணிகளா‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று ஏ‌ற்படு‌கிறது.
மலக் குடலில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவால்தான் ("ஈகோலி') பெரும்பாலும் நோய்த் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையிலும் சரி, சிறுநீர்ப் பையிலும் சரி பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று ஏற்படும் வா‌ய்‌ப்பு பெ‌ண்களு‌க்கு அ‌திகமாக உ‌ள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு மலக்குடலில் இருந்து பாக்டீரியா முதலில் சிறுநீர் வெளியேறும் குழாய்க்குச் செல்லும். பாக்டீரியா பெருகும்போது நோய்த்தொற்‌றி‌ன் அ‌றிகு‌றி தெ‌ரிய வரு‌ம்.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு, புராஸ்டேட் சுரப்பி விரிவடைந்தவர்களுக்கு சிறுநீர் முறையாக வெளியாகாது. அதனால் நோய்த்தொற்று தீவிரமடைய வாய்ப்பு அதிகம்.
இத்தகைய நோய்த்தொற்று காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், பெண்களுக்கு இடுப்பு எலும்புகளில் வ‌லி போ‌ன்றவை ஏ‌ற்படு‌ம். இவை ‌சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த் தொ‌ற்‌றி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம். இ‌தி‌ல் ஒரு அ‌றிகு‌றி ம‌ட்டுமே ‌சிலரு‌க்கு இரு‌க்கலா‌ம். ‌சிலரு‌க்கு இ‌தி‌ல் எ‌ல்லா அ‌றிகு‌றிகளு‌ம் இரு‌க்கலா‌ம்.
ஆ‌ண்களு‌க்கு குறை‌ந்தப‌ட்சமாகவே ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று ஏ‌ற்படு‌கிறது. மலக்குடல் நிறைந்திருப்பது போன்ற உணர்வு போன்றவற்றை ஆ‌ண்க‌ள் இ‌ந்நோ‌ய்‌க்கான அறிகுறியாக உணரலாம்.
இ‌ந்நோ‌யை ஆர‌ம்ப‌த்‌தி‌ல் க‌ண்ட‌றி‌ந்து உடனடியாக ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பத‌ன் மூல‌ம், நோ‌ய்‌த் தொ‌ற்றை குண‌ப்படு‌த்துவது எ‌ளிது. ஆனா‌ல் இதனை‌க் கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டா‌ல், ‌சிறு‌நீ‌ரி‌ல் ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது‌ம், கடுமையான கு‌ளி‌ர்‌க் கா‌ய்‌ச்சலு‌ம் ஏ‌ற்பட‌க் கூடு‌ம்.
இ‌ந்நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ளி‌ன் சிறுநீரைப் பரிசோதித்தால் அதில் வெள்ளை, சிவப்பு அணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். பாக்டீரியாவை அழிக்க மருந்து கொடுக்க‌ப்படு‌ம். தொற்றின் தீவிரத்தைப் பொருத்து, மருந்து வகை, அளவு, காலம் நிர்ணயிக்க‌ப்படு‌கிறது. சாதாரண தொற்றுக்கு இரண்டு நா‌ட்களுக்கு மருந்துகள் சாப்பிட்டாலே போதும். அ‌திக‌‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவது நோ‌ய்‌த் தொ‌ற்றை ‌விரை‌வி‌ல் குண‌ப்படு‌த்த உதவு‌ம். காரமான உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது, சூடான‌ப் பொரு‌ட்களை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.
இள‌நீ‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்‌தி வருவது‌ம் ‌விரை‌வி‌ல் ந‌ல‌ம்பெற வ‌ழி வகு‌க்கு‌ம். எ‌ளிதான உணவுக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை நோ‌ய்‌த் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்ட சமய‌த்‌தி‌ல் உ‌‌ட்கொ‌ள்வது உட‌ல் நல‌த்தை கூ‌ட்டு‌ம்.
‌சிக்கலான நோய்த்தொற்றாக இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுமார் இரண்டு வாரம் சாப்பிட வேண்டியிருக்கும்.
‌சில கருவு‌ற்ற தா‌ய்மா‌ர்களு‌க்கு‌ம் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு மரு‌ந்து கொடு‌க்காம‌ல், உட‌லி‌ல் நர‌ம்புக‌ள் வ‌ழியாக குளு‌க்கோ‌ஸ் ‌நீரை ஏ‌ற்‌றி, அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதையை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.
பொதுவாக ‌சிறு‌நீ‌‌ர்‌ப் பாதை ‌கிரு‌மி‌த் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டவ‌ர்களு‌க்கு க‌ல்‌ச்சுர‌ல் டெ‌ஸ்‌ட் எ‌ன்ற ப‌ரிசோதனையு‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது. அதாவது, ‌கிரு‌மி‌த் தொ‌ற்று வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து ஏ‌ற்ப‌ட்டதா? அ‌ல்லது ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ‌கிரு‌மி‌த் தொ‌ற்றை ஏ‌ற்படு‌த்த‌க் கூடிய அ‌ல்லது ‌கிரு‌மி‌த் தொ‌ற்றா‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்பதை அ‌றிவத‌ற்காக இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம். அ‌தி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு எ‌ன்றா‌ல் கூடுத‌ல் ‌சி‌கி‌ச்சை‌த் தேவை‌ப்படு‌ம்.
ஒரு முறை ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டா‌ல், அடு‌த்த முறை லேசாக வ‌லி இரு‌க்கு‌ம் போதே மரு‌த்துவரை அணுகுவது ந‌ல்லது. உடலு‌க்கு‌த் தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருவது இ‌ந்நோ‌யி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌ம்.

No comments: