Tuesday, December 29, 2009

Road accident

சாலை விதிகளை மீறக்கூடாது


வாகனத்தை,


 • டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடாது.
 • சிக்னலை மீறி ஓட்டக்கூடாது.
 • நோ என்ட்ரி யில் போகக்கூடாது.
 • நோ பார்க்கிங் இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது.
 • ஆட்டோவிலோ, காரிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ, லாரியிலோ அதிகமாகச் சுமையை ஏற்றிச் செல்லக் கூடாது.
 • அதிகமான உயரத்துக்கு பொருள்களை (சரக்குகளை) ஏற்றக்கூடாது.
 • போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.
 • குடிபோதையில் ஓட்டக்கூடாது.
 • அதிவேகமாக ஓட்டக்கூடாது.
 • அபாயகரமாக ஓட்டக்கூடாது.
 • மொபைல் போனில் பேசியபடியே ஓட்டக்கூடாது.
 • இருசக்கர வாகனம் என்றால் இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
 • ஹெல்மெட் அணியாமல் ஓட்டக்கூடாது.
 • கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம் ஏற்படுத்தக்கூடாது.

இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை மதித்து சாலை விபத்தைத் தவிர்த்து நல்வாழ்வு வாழ்வோமாக!

Wednesday, December 23, 2009

Abishekam for Lord Ganesh

பிள்ளையாருக்கு அபிஷேகம்


பிள்ளையார், கணபதி, கணேஷ், கணேசர், கணநாதர், விக்னேஷ், விக்னேஸ்வரர், விநாயகர், கஜமுகன் என்று சிறப்பாக அழைக்கப்படும் முழுமுதற் பொருளாகிய கடவுளுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களின் பலன்கள்.
 • மாம்பழச்சாறு அபிஷேகம் - வெற்றி

 • பஞ்சாமிர்தம் அபிஷேகம் (பஞ்சாமிர்த அபிஷேகம்) - அளவற்ற செல்வம்

 • இளநீர் அபிஷேகம் - உயர்ந்த பதவி

 • பால் அபிஷேகம் (பாலாபிஷேகம் / பாலபிஷேகம்) - ஆயுள் விருத்தி

 • தயிர் அபிஷேகம் - புத்திர பாக்கியம்

 • சர்க்கரை அபிஷேகம் - வெற்றி

 • அன்னாபிஷேகம் (அன்னம் = சாதம்) - சகல நன்மை

 • பன்னீர் அபிஷேகம் - மட்டற்ற மகிழ்ச்சி, நிம்மதி

 • விபூதி (திருநீறு) அபிஷேகம் - மேலான பதவி, வாக்கு மேன்மை

 • நல்லெண்ணெய் அபிஷேகம் - நல்ல உடல் நலம் (ஆரோக்கியம்) கிட்டும், நஞ்சு காய்ச்சல் (நச்சுக் காய்ச்சல் / விஷ ஜு ரம்) நீங்கும்.

Saturday, December 19, 2009

Kochara palan

கோச்சார பலன்


 • ஒரு ராசியைக் கடக்க, சந்திரனுக்கு இரண்டேகால் நாட்களும், சூரியனுக்கு ஒரு மாதமும், குருவுக்கு ஓராண்டும், ராகுவுக்கும் கேதுவுக்கும் முறையே பதினெட்டு மாதங்களும், சனிக்கு இரண்டரை ஆண்டுகளும் ஆகின்றன.

 • மக்களனைவரும் 12 ராசிகளுக்குள் அடக்கம். இந்த ராசியை லக்கினமாக வைத்துக்கொண்டு பலன் சொல்வதே கோச்சார பலன் ஆகும்.

 • இது பொதுப் பலன் தான்.

 • இதைப் போலத்தான் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகுப் பெயர்ச்சி , கேதுப் பெயர்ச்சி பலன்கள் எல்லாம்.

Friday, November 27, 2009

One, ten and multiple of tens in Tamil

ஒன்று முதல் மகாயுகம் வரை தமிழில்

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பதினாயிரம்
100000 = நூறாயிரம் அல்லது லட்சம்
1000000 = பத்து லட்சம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
10000000000000000000 = பரர்த்தம்
100000000000000000000 = பூரியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

Tuesday, November 24, 2009

கந்த சஷ்டி கவசம்

தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்

சஷ்டி கவசம் தனை.


அமர ரிடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.நூல்


சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக!

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர

ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

ஈரேழு உலகமும் எனக் குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே

அரிதிரு மருகா அமரா வதியைக்

காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா

தனிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணிய

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத் மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!

குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!

வெட்சி புனையும் வேளே போற்றி!

உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!

Wednesday, November 18, 2009

Fever மர்ம காய்ச்சல்

வித்தியாசமான மர்மக் காய்ச்சல்

தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் மர்மமான ஒருவகைக் கொடுமையான காய்ச்சல் பயங்கரமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. இதனால் மிகக் கஷ்டம். தாங்க முடியாத மூட்டுவலி ஏற்பட்டு மக்கள் அவதிப் படுகிறார்கள். மிகவும் கவனமாக இருப்பதுடன் கொசு கடிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பது எப்படி என்பதை அறிய கீழ்க்காணும் தளத்திற்குச் செல்லவும்.

http://severaltips.blogspot.com/2009/10/prevent-mosquito-breeding.html

Saturday, October 3, 2009

Tamil Horoscope Matching for Hindu marriages

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்வதாக இருந்தால், முன்கூட்டியே ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படும். பலவிதமான முறைகள் இருந்தாலும் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதை முக்கியமாக எண்ணுகிறார்கள்.

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

அஸ்வனி:
பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

பரணி:
ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி


கார்த்திகை 1 ம் பாதம்:
சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்:
அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4

ரோகிணி:
மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:
புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்:
திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

திருவாதிரை:
பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்:
பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

புனர்பூசம் 4 ம் பாதம்:
பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

பூசம்:
உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

ஆயில்யம்:
அஸ்தம், அனுஷம், பூசம்

மகம்:
சித்திரை, அவிட்டம் 3, 4

பூரம்:
உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

உத்திரம் 1 ம் பாதம்:
பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்:
பூராடம், திருவோணம், ரேவதி

அஸ்தம்:
உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

சித்திரை 1, 2 ம் பாதங்கள்:
விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

சித்திரை 3, 4 ம் பாதங்கள்:
விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

சுவாதி:
அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
சதயம், ஆயில்யம்

விசாகம் 4 ம் பாதம்:
சதயம்

அனுஷம்:
உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்


கேட்டை:
திருவோணம், அனுஷம்

மூலம்:
அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4

பூராடம்:
உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்

உத்திராடம் 1 ம் பாதம்:
பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்


உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்:
பரணி, மிருகசீரிஷம் 1, 2

திருவோணம்:
உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்:
சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

சதயம்:
கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:
உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

பூரட்டாதி 4 ம் பாதம்:
உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்


உத்திரட்டாதி:
ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4

ரேவதி:
பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:


அஸ்வனி:
பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்


பரணி:
புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

கார்த்திகை 1 ம் பாதம்:
சதயம்

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்:
சதயம்

ரோகிணி:
மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:
உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி


மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்:
திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி


திருவாதிரை:
பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்:
அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4


புனர்பூசம் 4 ம் பாதம்:
பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்


பூசம்
ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்


ஆயில்யம்:
சித்திரை, அவிட்டம் 1, 2


மகம்:
சதயம்


பூரம்:
உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி


உத்திரம் 1 ம் பாதம்:
சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்:
அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

அஸ்தம்:
பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4

சித்திரை 1, 2 ம் பாதங்கள்:
கார்த்திகை 2, 3, 4, மகம்

சித்திரை 3, 4 ம் பாதங்கள்:
கார்த்திகை 1, மகம்


சுவாதி:
பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

விசாகம் 4 ம் பாதம்:
அவிட்டம், சதயம், சித்திரை

அனுஷம்:
கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி

கேட்டை:
கார்த்திகை 2, 3, 4

மூலம்:
உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

பூராடம்:
பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி


உத்திராடம் 1 ம் பாதம்:
உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்:
உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

திருவோணம்:
அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
கார்த்திகை 1, மூலம்


அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்:
கார்த்திகை, சதயம், மகம், மூலம்

சதயம்:
சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:
மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

பூரட்டாதி 4 ம் பாதம்:
உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

உத்திரட்டாதி:
ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி


ரேவதி:
மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

To view Matching Of Horoscope (Astrology) in English, visit

http://hindumarriages.blogspot.com/2009/08/matching-of-astrology.html


Tuesday, September 29, 2009

அன்பு ஒலி Anbhu Oulee

அன்பு ஒலி (Anbhu Oulee) என்று ஒரு அருமையான மாத இதழ் மே 2009 முதல் தமிழில் வந்து கொண்டு இருக்கிறது.

Social development, general public awareness, useful discussions, future planning, business, personality development, entrepreneur, small scale industries, agriculture & farming, job, travel, comments, the other side of day to day activities, authority, past and present, short stories, trend, mental ability, belief, astrology, horoscope, medicine, self confidence, custom, etiquette, manners, tradition, behaviour, habits, college dreams, literature, games & sports என்று எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்பாக இருக்கிறது.

மேலும் இதுபற்றி அறிய http://anbhuoulee.com அல்லது http://www.anbhuoulee.com செல்க.

Thursday, September 24, 2009

Life saving earth / ground connection

Life saving earth / ground connection

எர்த் இணைப்பு உயிரைக் காக்கும்

நாம் அனைவரும் வழக்கமாகப் பயன்படுத்துவது மின்சாரம். நம் எண்ணங்களுக்கு ஏற்ப அதைப் பல வகைகளிலும் பயன்படுத்துகிறோம்.இத்தகைய மின்சாரமானது, பல இடங்களில் உலோகத்தாலான பொருள்களின் மேல் (பாடி) பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. மெயின் சுவிட்சு, அயர்ன் பாக்ஸ், கிரைண்டர் போன்றவற்றில் மின்கசிவு ஏற்படும் போது, நாம் அந்த சாதனங்களைத் தொட்டால் 'ஷாக்' அடித்துவிடும். ஒரு சில நிமிடங்களில் உயிர் போய் விடலாம். மின்சாரத்தில் கை பட்டவுடன் உடலில் பாய்ந்து, கால் வழியாகப் பூமிக்குப் பாய்கிறது. இதனால் இரத்தம் உறைந்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எப்போதும் தேவை.

இப்படிப்பட்ட ஆபத்தைத் தவிர்க்கவே, மின் சாதனங்களில் 'எர்த் இணைப்பு' கொடுக்கப் படுகிறது. நாம் அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அலட்சியப் படுத்தக் கூடாது.


தரையில் சுமார் ஒரு சதுர அடிப் பரப்பில் சுமார் ஆறு அடி குழி தோண்டி, இரும்புக் குழாயை இறக்கி இறுக்கி, கரி, உப்பு, மண் போட்டு மூடி, இரும்புக் குழாயின் மேற்பகுதியில் துளையிட்டு வீட்டில் அல்லது கட்டடத்தில் இருந்து வரும் 'எர்த் வயரை' 'நட்' ஐயும் 'போல்ட்' ஐயும் கொண்டு 'டைட்' ஆக இணைப்பார்கள். தண்ணீரையும் ஊற்றி ஈரம் ஆக்கி விடுவார்கள். இப்படிச் செய்தால், எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்கசிவால் நமக்கு ஷாக் அடிக்காது. அந்த மின்சாரம் உடனடியாக பூமிக்குக் கடத்தப்படும். நம் உயிரும் காப்பாற்றப்படும்.

Wednesday, September 16, 2009

Semen strength and sperm count

Tips to increase semen strength and sperm count
தாது பலம் பெறஆண்மை பெருகதாது விருத்தியாக


தாது பலப்பட:
பத்து கிராம் வில்வ வேர் பட்டையை ஒரு கிராம் சீரகத்துடன் அரைத்துபாலில் தொடர்ந்து சாப்பிடவும்.
முருங்கை  பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் காலைமாலை சாப்பிடவும்.

ஆண்மை பெருக:
திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும்.
பேரீச்சம் பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிடவும்.

தாது விருத்தியாக:
முருங்கை  இலை பொரியல் செய்து நெய் சேர்த்து நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிடவும்.
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடவும்.
பலாக்கொட்டையை அவித்து, காயவைத்து, தூளாக்கி, கருப்பட்டி அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
அதிமதுரத்தை பொடி செய்து பாலில் சேர்த்துக் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும்.
தாது இழப்பு தீர:
சாதிக்காய் பொடி,  பிரண்டை, உப்பு நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.

வெங்காயம் பாலுணர்வைத் தூண்டும். 
கருவேல மரத்துப் பிசினை சுத்தம் செய்து பொடியாக்கி  நெய்யில் பொரித்து சாப்பிட்டால் விந்து இறுகும்.
அசுவகந்தா லேகியம்  ஆண்மைக் கோளாறுகளை சரி செய்யும்.

அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து, பின்பு அதை எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரணமாக்கி   தேன் கலந்து உண்டால் ஆண்களுக்கு ஆண்மை கூடும்.


வலுவான ஆண்மைக்கு 
அரசம்பழத்தை பாலில் காய்ச்சி வெல்லத்துடன் ஒவ்வொருநாளும் குடித்தால் ஆண்மை வலுவடையும். ஆண்குறியின் தளர்ச்சி நீங்கும்.
ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும்.
செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும்.
பேரீச்சம்பழம், உளுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால் தளர்வு நீங்கும்.
இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்து வந்தால்  ஆண்மை வலுப்பெறும்.

Wednesday, September 2, 2009

Fairness treatment at home

முகம் சிகப்பான அழகு பெற, சிவப்பழகு பெற எளிய வீட்டுக் குறிப்புகள்

 • பப்பாளிக் காயின் பாலை முகப்பருவில் தடவினால் பருக்கள் மறைந்து விடும்.
 • வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவிச் சற்று சென்றதும் கழுவி விடவும். தொடர்ந்து இவ்வாறு செய்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவான தோற்றத்தை அடையும்.
 • வெள்ளரி வில்லைகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து நன்கு கழுவப்பட்ட முகத்தில், மூடிய கண்களின் மீது வைத்து ஓய்வு எடுக்கவும். பின்னர் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
 • வெள்ளரிச் சாற்றையும் உருளைக்கிழங்குச் சாற்றையும் கலந்து பஞ்சினால் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
 • வெள்ளரியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் செய்து முகத்தில் தடவிக் காயவிட்டு, கழுவினால், தழும்புகள் மறையும்.
 • ஒரு தேக்கரண்டி உளுந்தையும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்புகளையும் ஊற வைத்து அரைக்கவும். இதை முகத்தில் தடவி, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவவும். முகம் பொலிவடையும்.
 • பாலில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் சென்றபின் முகம் கழுவினால் தோலில் உள்ள துவாரங்கள் திறக்கும். அதனால் தோல் (சருமம்) சுத்தமாகும்.
 • முகம் அழகாக முகத்தில் என்ன தடவினாலும் கழுத்துக்கும் சேர்த்தே தடவவும். அப்போது தான் நிறம் வித்தியாசப் படாது.
 • முல்தானி மிட்டி என்பது ஒரு வகையான மண். 'Fuller's earth' என்று இதற்குப் பெயர். பருவைப் போக்கவும், கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும் இதை பேக் போடலாம். பன்னீருடன் சேர்த்துப் போட்டால் சிறப்பாக இருக்கும். எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், எண்ணெய்ப் பிசுக்கு முகத்தையும் நல்லபடியாக மாற்றிவிடும்.
 • அரிசி மாவுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் தேய்த்துக் கழுவவும். பருக்கள் மறையும். பருவினால் வந்த வடு மறையும். முகம் பளபளப்பாகும்.
 • அரிசி மாவுடன் ஆரஞ்சு சாறு கலந்தும் தடவலாம்.
 • தக்காளிச் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாரு விட்டு முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் கழுவி விட்டால் முகம் பளபளப்பாகும்.
 • கடலை மாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பொலிவடையும்.
 • மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவினால் தேவையற்ற முடிகள் (ரோமங்கள்) உதிர்ந்து விடும்.
 • வாழைப்பழத்தையும் தேனையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி சுமார் கால் மணி நேரம் ஊற வைத்தால் வறண்ட தோல் மிருதுவாகும்.
 • முட்டைக்கோஸ் சாறு , தேன், எலுமிச்சைச் சாறு இம்மூன்றையும் கலந்து கழுத்தில் தேய்த்தால் கருமை நிறம் மாறும்.
 • பப்பாளிப்பழத்தின் சதையை வாரம் இருமுறை முகத்தில் தடவினால் முகம் பிரகாசம் அடையும். கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், வடுக்கள் மறையும்.
 • கடுமையான வெயில், கடும் குளிர் காலங்களில் வெளியில் அதிகம் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
 • தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
 • புதிய காய்கறிகள் பழங்கள் சாப்பிடவும்.
 • நீராவிக் குளியல் சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

Monday, August 24, 2009

Road accident

சாலை விபத்து


எதிரே வருபவர் எமன்
எனக் கெதிரே வருபவர் எவரென்றாலும்
எதிரே வருபவர் எமன் - இது
புதிரல்ல புது ஞானம்.

மெதுவாய் பைக்கில் போனேன்
அழகாய் மனைவி என் முதுகின் பின்னே
வந்தது குறுக்கே திடீரென்று, அப்படி
வரக்கூடாத ஒரு டூவீலர்.

கண்ணிமைக்கும் நேரத்திலே
கடினமாய் மோதிய வேகத்திலே
அதிர்ந்தது ரோடு; கூடியது ஊரு
சொறுகின என் கண்கள்; எங்கே என் துணைவி?

நெஞ்சடி எனக்கு
இடுப்படி அவளுக்கு
பொடிப்பொடியாயின
பைக்கின் பாகங்கள்.

கூடிய மக்கள் நல்லவர்கள் - சும்மா
வேடிக்கை பார்க்கவே இல்லை அவர்கள்
உடனடி உதவிகள் செய்து - நாங்கள்
உயிர் பிழைத்திருக்க வைத்தவர்கள்.

அன்று நடந்தது விபத்து
என்று தொலையும் இந்த ஆபத்து
சாலையில் கவனம் செலுத்து என்றேன்
சாலை விதிகளை மதிப்போம் என்றேன்.

அதுமுதல் என் மனம் சொல்கிறது
கவனம் கவனம் கவனம்
எதிரே திடீரென வருவர்
காற்றினும் கடுகி மறைவர்.

கவனம் தேவை எப்போதும்
எதிரே வருபவர் எமன்!

Saturday, August 22, 2009

Footwear tips

  Tips to buy and maintain footwear in Tamil
காலணி வாங்குவதும் பாதுகாப்பதும் எப்படி?


 • காலணி எதுவாக இருந்தாலும் சரி. அது ஷூ, செருப்பு, ஸ்லிப்பர், சாண்டக்ஸ், பெலீஸ், பூட்ஸ் என்று எதுவாக இருந்தாலும் சரியான அளவில் உள்ள தரமானதாகப் பார்த்து வாங்கவேண்டும்.
 • சரியான அளவைத் தெரிந்து கொள்ள மாலை நேரத்தில் வாங்குவது தான் சிறந்தது. ஏனென்றால், பகல் பொழுதில் நாம் வேலை செய்வதால், மாலை நேரத்தில் நம் கால்கள் சற்று அளவில் பெரியனவாக இருக்கும்.
 • புதுச் செருப்பை மாட்டிக் கொண்டு சிறிது நடந்து பார்த்து வாங்கவும். விலை மலிவு என்றோ கவர்ச்சியாக இருக்கிறது என்றோ தரம் குறைந்த செருப்புகளை வாங்கினால் நமக்குத்தான் பல வகைகளிலும் தொல்லை.
 • நீரில் நனையாமல் பார்த்துக் கொள்ளவும்.
 • குதிகால் உயர்ந்த செருப்பு துன்பம் தரும். முன்னும் பின்னும் ஒரே உயரம் கொண்ட செருப்பு தேவலாம்.
 • தோல் செருப்பே சிறந்தது.
 • மழைக் காலத்தில் ரப்பர் செருப்பு அணிவதைத் தவிர்க்கவும்.
 • பிறருடைய செருப்பை அணியக் கூடாது. அதேபோல யார் இரவல் கேட்டாலும் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
 • ஷூ போட்டுக் கொண்டதும் கால் விரல்களை ஆட்டிப் பார்க்கவும். விரல்களுக்கும் ஷூவிற்கும் இடையில் நல்ல இடைவெளி தேவை.
 • எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
 • சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டும்.
 • ஷூக்கள் நல்ல பாலிஷ் போடப்பட்டால் நீண்ட காலத்திற்கு வரும்.

Sunday, August 16, 2009

Safe Travel Tips In Tamil

To view safe travel tips in English, visit

http://severaltips.blogspot.com/2008/07/safe-travel-tips.html

பாதுகாப்பான பயணத்துக்கு சில டிப்ஸ்

 • குறைவான லக்கேஜ் எடுத்துச் செல்லுங்கள். பயணம் சுகமாக அமையும்.
 • ரயில், பஸ் கால அட்டவணையைத் தெரிந்து வைத்திருங்கள்.
 • மாற்றுத் திட்டத்தையும் கைவசம் வைத்திருங்கள்.
 • லக்கேஜ்களை டிரெயின் அல்லது பஸ் சீட் கொக்கியுடன் சேர்த்துப் பூட்டி வைக்கவும். மேலும் அதன் மேல் ஒரு கண் இருக்கட்டும்.
 • முக்கியமான டாக்குமெண்ட் களின் ஜெராக்ஸ் காப்பி, ஒரு சிறிய டார்ச், முதல் உதவிப் பெட்டி, அட்ரஸ் புத்தகம் போன்றவற்றை வைத்திருக்கவும்.
 • ஏதேனும் மருந்து கொண்டு சென்றால் மருந்துச் சீட்டையும் உங்களுடன் கொண்டு செல்லவும்.
 • ஆடம்பரமாக வெளியில் காட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • பொது இடங்களில் பணத்தை வெளியே காட்டாதீர்கள்.
 • ிக்பாக்கெட் என்னும் ஜேப்படித் திருடர்கள் இருப்பார்கள். கவனம்.
 • குற்ற நடவடிக்கைகள் நிரம்பிய பகுதிகளில் தனியே செல்லாதீர்கள்.
 • பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்.
 • தெரியாதவர்களிடம் இருந்து எந்த உணவையும் பானத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ங்களை மயக்கப் படுத்தி, திருடிவிட்டு ஓடி விடுவார்கள்.
 • பயணம் செய்யும் நேரம், பாதை போன்றவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கவும்.
 • யணத்திட்டம், ரூம் நம்பர், சொந்த விபரங்கள் போன்றவற்றை பிறர் காதுகளில் விழும் வண்ணம் சத்தமாகப் பேசாதீர்கள்.
 • கைவசம் சில்லறை தாராளமாக இருக்கட்டும்.டாக்ஸி, ஹோட்டல் பில் செலுத்த வசதியாக இருக்கும்.

சுகமான பயணத்துக்கு என் வாழ்த்துக்கள்.

Sunday, August 9, 2009

Arugam pul / அருகம்புல்

CYNODON DACTYLON - அருகம்புல்:


 • காலையில் அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, மண்போகக் கழுவி, வேருடன் அரைத்துச் சாறு பிழியவும்.
  அரைத் தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டிசீரகம், கால் தேக்கரண்டி அதிமதுரம், கால்
  தேக்கரண்டி சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து, சலித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு, அரை டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி நீங்கி விடும்.

 • அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, சலித்து வைத்துக் கொண்டால், பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

 • ஒரு தேக்கரண்டி அருகம்புல் வேர்ப் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.

 • அருகம்புல்லைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, நூறு கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து, இரண்டு பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி நசுக்கி, உப்பையும் அருகம்புல்லையும் சேர்த்துக் கிளரினால் அதுதான் அருகம்புல் பொரியல். இதைச் சாப்பிட்டால் சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

 • அருகம்புல் சாற்றை மோருடன் குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

 • அருகம்புல் சாற்றைத் தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும், உடல் உறுதியாகும், ரத்தம் பெருகும்.

 • அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

 • குழந்தைகளுக்குப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

 • ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

 • இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

 • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி, அதிலிருந்து விடுபடலாம்.

 • உடல் சூட்டையும் தணிக்கிறது.
 • நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்தது.

 • உடல் இளைக்க வேண்டுமானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

 • சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

 • ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு.

 • அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பளபளக்கும்.

 • அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் மென்மையாகி விடும்.

 • கரிசாலை இலை 100 கிராம், தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம், இவற்றை வகைக்கு 25 கிராம் நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி, பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அருந்துதல் நலம். இரத்த விருத்தி, உடல் வலிமை உண்டாகும். சளி மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவுகள் உண்டாகாது.

 • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.