சிறுநீரை அதிகமாக பிரித்து, நுண்கிருமிகள் மற்றும் உப்புகள் தேங்காவண்ணம் காத்து, சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி.
அன்ட்ரோகிராபிஸ் எகியாயிடஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அகன்தேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வெப்ப பகுதிகளில் வளருகின்றன. எக்கியோடினின் என்ற பிளேவன் மற்றும் எக்கியாயிடின் போன்ற வேதிச்சத்து நிறைந்துள்ள இந்த தாவரம் சிறுநீரை பெருக்கி, சிறுநீர் சிக்கலை நீக்கும் ஆற்றலுடையது.
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர சிறுநீர் நன்கு வெளியேறும். எரிச்சல் குறையும்.
உலோக மற்றும் உப்பு கற்களை கரைக்கும் ஆற்றலுடையதால் சித்த மருத்துவத்தில் பற்பங்கள் மற்றும் செந்தூரங்கள் தயாரிக்க உலோகசுத்திக்கு பயன்படுகிறது. அடிக்கடி சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் கோபுரந்தாங்கி கசாயத்தை 10 முதல் 15 நாட்கள் குடித்து வரலாம்.
No comments:
Post a Comment