google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Melmaruvathoor Adiparasakthi Potri
Showing posts with label Melmaruvathoor Adiparasakthi Potri. Show all posts
Showing posts with label Melmaruvathoor Adiparasakthi Potri. Show all posts

Saturday, December 18, 2010

Melmaruvattur Athiparashati Potri



  1. ஓம் ஓம் சக்தியே போற்றி ஓம்!
  2. ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம்!
  3. ஓம் உலக நாயகியே போற்றி ஓம்!
  4. ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்!
  5. ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்!
  6. ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம்!
  7. ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி ஓம்!
  8. ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்!
  9. ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்!
  10. ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்!

  1. ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம்!
  2. ஓம் ககனவெளி ஆனாய் போற்றி ஓம்!
  3. ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம்!
  4. ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி ஓம்!
  5. ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம்!
  6. ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம்!
  7. ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம்!
  8. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம்!
  9. ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி ஓம்!
  10. ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம்!

  1. ஓம் சக்தியே தாயே போற்றி ஓம்!
  2. ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம்!
  3. ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம்!
  4. ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம்!
  5. ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி ஓம்!
  6. ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
  7. ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்!
  8. ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்!
  9. ஓம் அகண்டமே விரிந்தாய் போற்றி ஓம்!
  10. ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி ஓம்!

  1. ஓம் அனலாக ஆனாய் போற்றி ஓம்!
  2. ஓம் நீராக நிறைந்தாய் போற்றி ஓம்!
  3. ஓம் நிலனாகத் தணிந்தாய் போற்றி ஓம்!
  4. ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி ஓம்!
  5. ஓம் துணிபொருள் நீயே போற்றி ஓம்!
  6. ஓம் காராக வருவாய் போற்றி ஓம்!
  7. ஓம் கனியான மனமே போற்றி ஓம்!
  8. ஓம் மூலமே முதலே போற்றி ஓம்!
  9. ஓம் முனைச்சுழி விழியே போற்றி ஓம்!
  10. ஓம் வீணையே இசையே போற்றி ஓம்!

  1. ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி ஓம்!
  2. ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி ஓம்!
  3. ஓம் சகலமறைப் பொருளே போற்றி ஓம்!
  4. ஓம் உத்தமி ஆனாய் போற்றி ஓம்!
  5. ஓம் உயிர்மொழிக்குருவே போற்றி ஓம்!
  6. ஓம் நெஞ்சம் நீ மலர்வாய் போற்றி ஓம்!
  7. ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி ஓம்!
  8. ஓம் துரிய நிலையே போற்றி ஓம்!
  9. ஓம் துரியா தீத வைப்பே போற்றி ஓம்!
  10. ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி ஓம்!

  1. ஓம் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் போற்றி ஓம்!
  2. ஓம் கருவான மூலம் போற்றி ஓம்!
  3. ஓம் உருவான கோலம் போற்றி ஓம்!
  4. ஓம் சாந்தமே உருவாய் போற்றி போற்றி ஓம்!
  5. ஓம் சரித்திரமே மறைத்தாய் போற்றி ஓம்!
  6. ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி ஓம்!
  7. ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி ஓம்!
  8. ஓம் கையிரண்டு உடையாய் போற்றி ஓம்!
  9. ஓம் கரைபுரண்ட கருணை போற்றி ஓம்!
  10. ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி ஓம்!

  1. ஓம் மோனநல் தவத்தாய் போற்றி ஓம்!
  2. ஓம் யோகநல் உருவே போற்றி ஓம்!
  3. ஓம் ஒளியென ஆனாய் போற்றி ஓம்!
  4. ஓம் எந்திரத் திருவே போற்றி ஓம்!
  5. ஓம் மந்திரத் தாயே போற்றி ஓம்!
  6. ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி ஓம்!
  7. ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி ஓம்!
  8. ஓம் மாயவன் தங்கையே போற்றி ஓம்!
  9. ஓம் சேயவன் தாயே போற்றி ஓம்!
  10. ஓம் திரிபுரத்தாளே போற்றி ஓம்!

  1. ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி ஓம்!
  2. ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி ஓம்!
  3. ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி ஓம்!
  4. ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி ஓம்!
  5. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி ஓம்!
  6. ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி ஓம்!
  7. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்!
  8. ஓம் அருள்ஒளி செய்வாய் போற்றி ஓம்!
  9. ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி ஓம்!
  10. ஓம் கனவிலே வருவாய் போற்றி ஓம்!

  1. ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி ஓம்!
  2. ஓம் மக்களைக் காப்பாய் போற்றி ஓம்!
  3. ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
  4. ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி ஓம்!
  5. ஓம் இதயமாம் வீணை போற்றி ஓம்!
  6. ஓம் உருக்கமே ஒளியே போற்றி ஓம்!
  7. ஓம் உள்ளுறை விருந்தே போற்றி ஓம்!
  8. ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
  9. ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி ஓம்!
  10. ஓம் நாதமே நலமே போற்றி ஓம்!

  1. ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி ஓம்!
  2. ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி ஓம்!
  3. ஓம் உயர்நெறி தருவாய் போற்றி ஓம்!
  4. ஓம் நித்தமுங் காப்பாய் போற்றி ஓம்!
  5. ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்!
  6. ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்!
  7. ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்!
  8. ஓம் வித்தையே விளக்கே போற்றி ஓம்!
  9. ஓம் விந்தையே தாயே போற்றி ஓம்!
  10. ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!

  1. ஓம் ஏங்குவோர் துணையே போற்றி ஓம்!
  2. ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி ஓம்!
  3. ஓம் கண்மணி ஆனாய் போற்றி ஓம்!
  4. ஓம் சத்தியப் பொருளே போற்றி ஓம்!
  5. ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
  6. ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி ஓம்!
  7. ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்!
  8. ஓம் ஆறாதார நிலையே போற்றி ஓம்!

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்