Friday, December 22, 2017

Honey Gooseberry

Honey Gooseberry is rich in Vitamin C and Iron.
தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்: 
நெல்லிக்காய் - 1 கிலோ
பால் - இரண்டு கரண்டி
வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கிலோ

செய்முறை:
1. ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதில் பரப்பி வையுங்கள். வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

2. பால் கலந்த தண்ணீர் சூடானதும், நெல்லிக்காய் பரப்பிய இட்லி தட்டுகளை வைத்து, இட்லி பானையை மூடி அவித்து எடுக்கவும்.

3. அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம் என்றால் சுமார் ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவாக சேர்பவர்களுக்கு. இனிப்பு அதிகம் வேண்டும் என்றால் ஒரு கிலோ வெல்லம் சேர்க்கலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சுங்கள்.

4. அதிகம் காய்ச்சாமல், பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் இறக்கி விடவும். இதில் வெந்த நெல்லிக்காயைப் போட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுங்கள்.

5.  தினமும் எடுத்து சாப்பிடுங்கள். மீதமிருக்கிற பாகை குடிக்கலாம்.

Saturday, November 25, 2017

Purananooru 277

புறநானூறு 277

பாடியவர் பூங்கணுத்திரையார்
திணை தும்பை
துறை உவகைக் கலுழ்ச்சி
பாடல் பின்னணி:   போருக்குச் சென்ற  தன் மகன் விழுப்புண்பட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு ஒரு முதிய தாய் பெருமையால் மகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். பூங்கணுத்திரையார் அவளது மறமாண்பு கண்டு வியந்து எழுதிய பாடல் இது.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன,
வால் நரைக் கூந்தல் முதியோள்  சிறுவன்,
களிறு எறிந்து  பட்டனன் என்னும் உவகை
ஈன்ற  ஞான்றினும் பெரிதேகண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும்  பலவே.

பொருளுரை:  மீன் உண்ணும் கொக்கின் இறகுகளைப் போல் வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதிய தாய், தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமானது.   அவளுடைய கண்ணீர்த் துளிகள், வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை.    

Puranānūru 277, Poonkanuthiraiyār, Thinai: Thumpai, Thurai: Uvakai Kalulchi

When the old woman with grey hair,
like the feathers of fish-eating storks,
heard that her son was killed slaying an
elephant, she felt more joy than on the
day when she gave birth to him.
Her tears were more than the drops of
water, that hang on the sturdy, swaying
bamboos after the rain and drop.
Note: Poonkan is the old name of the town Thōrur on the bank of river Cauveri.


Tuesday, June 20, 2017

Madurai Veeran songSong - Madurai Veeran Thaane
Movie - Dhool
Music Director - Vidyasagar
Singer - Paravai Muniyamma
Starring - Vikram, Jyothika, Reema Sen, Vivek, Sayaji Shinde, Manoj K Jayan
Producer - A. M. Rathnam
Director - Dharani
Year - 2002

Lyrics: 

Madurai veeran thaanae
avanai usuppi viitae veenae
ini whistle paRakkum dhaanae
yen paeraaNdi madurai veeran dhaanae
yeh singam poala

Yeh singam poala nadandhu vaRaan chella paeraaNdi
avanai cheeNdiyavan thaanga maattan udhaiyila thaaNdi
yeh thilla taangu taangu chumma thiruppi poattu vaangu (2)
yeh chiyaan chiyaan chinukku ivanai kuthoorukku anuppu (2)

Yeh puliya poalae
yeh puliya poalae thuNinchavanda enga paeraandi
ungaLai panchu muttaay poala pichu veesa poaRaandi (2)
yeh thilla taangu taangu chumma thiruppi poattu vaangu
yeh thilla taangu taangu chumma seerivittu vaangu
hey indha hey indha hey indha indha indha indha indhaaa...(2)
aah aah aah aah indhaa.....

Yeh sooRaavaLi
yeh sooRavaaLi kaathu poala suzhandu varaandi (2)
avanai suthi niRkum pasangaLellaam miraNdu poaRaaNdi (2)
yeh thilla taangu taangu chumma thiruppi poattu vaangu
yeh kovilpatti muRukku chumma kuniya vachu noRukku da daey
yeh jallikattu

Yeh jallikattu kaaLai poala thuLLi vaaraan di (2)
ungaLai panamarama pudungi ippo veesa poaRaaNdi (2)
hey gumthalakkadi gumma adi vittaam paaru yemma (3)

Monday, June 19, 2017

December MonthSangamam is a 1999 Tamil musical romance film directed by Suresh Krishna and produced by V. Natarajan of Pyramid Films. The film featured Rahman and Vindhya in the lead roles with Manivannan, Vijayakumar and Radharavi. Music: A. R. Rahman, Lyricist: Vairamuthu, Singers: Madhumitha, Unnikrishnan. Cinematography: Saravanan.

Friday, March 10, 2017

Flax Seed Benefits and Nutrition Facts

Flax seeds have been consumed as food for around 6,000 years and may have very well been the worlds first cultivated super food!
Flax seed benefits could help you improve digestion, give you clear skin, lower cholesterol, reduce sugar cravings, balance hormones, fight cancer and promote weight loss… and that’s just the beginning!
Flaxseeds, sometimes called linseeds, are small, brown, tan or golden-colored seeds that are the richest sources of a plant-based omega-3 fatty acids, called alpha-linolenic acid (ALA) in the world!
Another unique fact about flaxseeds is that they rank No. 1 source of lignans in human diets. Flaxseeds contain about 7 times as many lignans as the closest runner-up, sesame seeds.
ஆளி விதை


ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர்லின் சீட்ஸ்’ (Lin seeds) . 

நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்என்பதற்கு லத்தீனில்மிகவும் பயனுள்ளதுஎன்று அர்த்தம். 

அவர்கள் பாஷையில் அதைலினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது. 

இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. லத்தீனில் அரசர் சார்லே மாக்னே என்பவர் 8ம் நூற்றாண்டில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து தனது அரசவையில் இருப்பவர்களுக்கு தினமும் கொடுத்தார். பிறகு தனது நாட்டில் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சட்டத்தையே கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைப் பற்றி இப்போது பலநாடுகளில் பலவிதமாக ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள். பல விஞ்ஞானி கள் இதைப் பலருக்கும் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர். 

தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில்அவிஸி கிற்சலு’, மலையாளத்தில்செருவுசான வித்து, கன்னடத்தில்அகஸி’, ஹிந்தியில்அல்ஸி‘, பெங்காலியில் டிஷி (ஜிவீsலீவீ) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில்லின் சீட்ஸ்என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.

100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்

புரதச்சத்து - 20.3 கிராம்
கொழுப்பு - 37.1 கிராம்
நார்ச்சத்து - 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி - 530 கி.கலோரிகள்
கால்சியம் - 170 மி.கிராம்
பாஸ்பரஸ் - 370 மி.கிராம்
இரும்புச்சத்து - 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன.
இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒருமுழுமையான உணவுஎன்று கூறலாம்.
நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு

*இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான்ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ளலிக்னன்என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானதுபிட்ஸ் பேட்ரிக்என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.

*பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில்ஹாட் ஃப்ளஷஸ்என்று கூறுவர். உடலில்ஈஸ்ட்ரோஜன்என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

*இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.

*இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

*தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.

*இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.

இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.

*ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.

*இதைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் பழங்களில் இருந்து செய்யும்ஸ்மூத்தி’, மில்க் ஷேக், தயிர், லஸ்ஸி, கஞ்சி போன்றவற்றில் சேர்க்கலாம்.

*கேக், பிஸ்கெட், பிரெட், பன் போன்றவற்றிலும் சேர்க்க இயலும்.

*இதில் துவையல், பொடி வகைகள், கலவை சாதங்கள் செய்தால் ருசியாக இருக்கும்.

*வெல்லம் சேர்த்து செய்யும் சில இனிப்பு களோடு சேர்த்தும் செய்யலாம். உலர்பழ லட்டு, எள் பர்பி, எள் உருண்டை போன்றவற்றுடன் சேர்க்கலாம்.

*சாண்ட்விச், தோசையின் மேல் பூசும் மசாலாவின் மீது, ஸ்டஃப்டு சப்பாத்தி என்று பலவற்றிலும் சேர்க்க இயலும்.

*உலர்பழ வகைகளில் பேரீச்சம்பழம், திராட்சை, அக்ரோட், அத்தி, பாதாம் போன்றவற்றுடன் சேர்த்து வெல்லமே சேர்க்காமல் பர்பி, லட்டு செய்யலாம்.நான் செய்து ருசித்த, பின்வரும் உணவுகளை செய்து பாருங்கள்.

1. ஆளி விதை சாதம்

1 ஆழாக்கு சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும். 4 சிவப்பு மிளகாய், 1லு டேபிள் ஸ்பூன் உளுந்து, 1லு டேபிள் ஸ்பூன் ஆளி விதை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடி செய்யவும். சாதத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இந்தப் பொடியைத் தூவி தகுந்த உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். மிக ருசியாக இருக்கும்.

2. எள், ஆளி விதை லட்டு

1/4 ஆழாக்கு எள்ளை நிறம் மாறும் வரை தனியே வறுக்கவும். 1/4 ஆழாக்கு ஆளி விதையை பொரிந்து, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு விட்டு இயக்கவும். பொடியானதும் சம அளவு துருவிய வெல்லம், ஏலத்தூள் சிறிதளவு சேர்த்து ஒரு தடவை மிக்ஸியை இயக்கி சேர்ந்து கொண்டதும் தட்டில் கொட்டவும். சிறிய உருண்டைகளாகச் செய்யவும். தினமும் 2 உருண்டை எல்லோரும் சாப்பிட இயலும்.

3. ஆளி விதை துவையல்

ஆளி விதை 2 டேபிள்ஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்ளவும். சம அளவு கொள்ளைத் தனியே வறுக்கவும். 5 சிவப்பு மிளகாயை ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆற விட்டு இதோடு சிறிது ஊற வைத்த புளி, 3 பல் பூண்டு, தகுந்த உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கலாம். சாதத்துடனும் பரிமாறலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் கொடுக்கலாம்.

இதில் உள்ளஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும்.
அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

ஒரு முக்கியக் குறிப்பு

கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.

இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.