google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: தலைவாரிப் பூச்சூடி உன்னை

Wednesday, May 5, 2010

தலைவாரிப் பூச்சூடி உன்னை

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி

வேளைதோறும் கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

(தலைவாரிப் பூச்சூடி)


படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்

கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு!

கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி

கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு - பெண்

கல்வி பெண்கல்வி என்கின்றது அன்போடு!


(தலைவாரிப் பூச்சூடி)

No comments: