google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: flowers and worship
Showing posts with label flowers and worship. Show all posts
Showing posts with label flowers and worship. Show all posts

Friday, July 9, 2010

பூக்களும் கடவுள் வணக்கமும்

இறைவனை அர்ச்சிக்க உதவும் பூக்கள்:

  • விநாயகர் - செம்பருத்தி, தாமரை, ரோஜாமலர், அருகம்புல்.
  • முருகன் - மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி.
  • அம்மன் -மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை.
  • சிவன் -தும்பை, வில்வம, செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம் (நந்தியாவட்டை), செண்பகம்.
  • விஷ்ணு - தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி.

மலர்களால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பயன்கள்:

  • தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.
  • ரோஜா -சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.
  • அருகம்புல் -கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.
  • எருக்கம் பூ -பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.
  • செம்பருத்தி, அரளி -தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.
  • முல்லை, மல்லிகை -புனிதத்தன்மை தரும். சமநிலை அளிக்கும்.
  • துளசிப்பூவும் இலையும் -பக்தி தரும்.
  • மருக்கொழுந்து -வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.
  • பவளமல்லி -சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.
  • நந்தியாவட்டம் -பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.