google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Tips: Road accident
சாலை விதிகளை மீறக்கூடாது
வாகனத்தை,
- டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடாது.
- சிக்னலை மீறி ஓட்டக்கூடாது.
- நோ என்ட்ரி யில் போகக்கூடாது.
- நோ பார்க்கிங் இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது.
- ஆட்டோவிலோ, காரிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ, லாரியிலோ அதிகமாகச் சுமையை ஏற்றிச் செல்லக் கூடாது.
- அதிகமான உயரத்துக்கு பொருள்களை (சரக்குகளை) ஏற்றக்கூடாது.
- போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.
- குடிபோதையில் ஓட்டக்கூடாது.
- அதிவேகமாக ஓட்டக்கூடாது.
- அபாயகரமாக ஓட்டக்கூடாது.
- மொபைல் போனில் பேசியபடியே ஓட்டக்கூடாது.
- இருசக்கர வாகனம் என்றால் இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
- ஹெல்மெட் அணியாமல் ஓட்டக்கூடாது.
- கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம் ஏற்படுத்தக்கூடாது.
இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை மதித்து சாலை விபத்தைத் தவிர்த்து நல்வாழ்வு வாழ்வோமாக!
சாலை விபத்து
எதிரே வருபவர் எமன்
எனக் கெதிரே வருபவர் எவரென்றாலும்
எதிரே வருபவர் எமன் - இது
புதிரல்ல புது ஞானம்.
மெதுவாய் பைக்கில் போனேன்
அழகாய் மனைவி என் முதுகின் பின்னே
வந்தது குறுக்கே திடீரென்று, அப்படி
வரக்கூடாத ஒரு டூவீலர்.
கண்ணிமைக்கும் நேரத்திலே
கடினமாய் மோதிய வேகத்திலே
அதிர்ந்தது ரோடு; கூடியது ஊரு
சொறுகின என் கண்கள்; எங்கே என் துணைவி?
நெஞ்சடி எனக்கு
இடுப்படி அவளுக்கு
பொடிப்பொடியாயின
பைக்கின் பாகங்கள்.
கூடிய மக்கள் நல்லவர்கள் - சும்மா
வேடிக்கை பார்க்கவே இல்லை அவர்கள்
உடனடி உதவிகள் செய்து - நாங்கள்
உயிர் பிழைத்திருக்க வைத்தவர்கள்.
அன்று நடந்தது விபத்து
என்று தொலையும் இந்த ஆபத்து
சாலையில் கவனம் செலுத்து என்றேன்
சாலை விதிகளை மதிப்போம் என்றேன்.
அதுமுதல் என் மனம் சொல்கிறது
கவனம் கவனம் கவனம்
எதிரே திடீரென வருவர்
காற்றினும் கடுகி மறைவர்.
கவனம் தேவை எப்போதும்
எதிரே வருபவர் எமன்!