google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Kolaivaalinai edada
Showing posts with label Kolaivaalinai edada. Show all posts
Showing posts with label Kolaivaalinai edada. Show all posts

Friday, October 1, 2010

Get the Sword

கொலைவாளினை எடடா!

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில் மேவிடு! கவிதைபுணை தமிழா!
கடலேநிகர் படை சேர் கடு விடநேர் கருவிகள் சேர்!
நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்;
நீதிநூல்விளை! உயிர் நூல் உரை நிசநூல் மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம் வானிலும் அணி மாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன ததிகரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம் எனவே முரசரைவாய்!
இலையே உண விலையே கதி இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்!

                                  - புரட்சிக்கவி பாரதிதாசன்