google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: ginger
Showing posts with label ginger. Show all posts
Showing posts with label ginger. Show all posts

Tuesday, June 15, 2010

உணவுக்கு வாசனை உடலுக்கு ஆரோக்கியம்

பட்டை:

  • செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்:

  • பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
கிராம்பு:

  • நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி :

  • மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா:

  • ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்:

  • வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
மல்லி:

  • செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்:

  • காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
சோம்பு:

  • வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்:

  • கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்:

  • சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
வெந்தயம்:

  • நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
கடுகு:

  • இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
பூண்டு:

  • வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.
ஓமம்:

  • இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது.

Sunday, August 9, 2009

Arugam pul / அருகம்புல்

CYNODON DACTYLON - அருகம்புல்:


  • காலையில் அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, மண்போகக் கழுவி, வேருடன் அரைத்துச் சாறு பிழியவும்.
    அரைத் தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டிசீரகம், கால் தேக்கரண்டி அதிமதுரம், கால்
    தேக்கரண்டி சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து, சலித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு, அரை டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி நீங்கி விடும்.

  • அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, சலித்து வைத்துக் கொண்டால், பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

  • ஒரு தேக்கரண்டி அருகம்புல் வேர்ப் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.

  • அருகம்புல்லைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, நூறு கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து, இரண்டு பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி நசுக்கி, உப்பையும் அருகம்புல்லையும் சேர்த்துக் கிளரினால் அதுதான் அருகம்புல் பொரியல். இதைச் சாப்பிட்டால் சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

  • அருகம்புல் சாற்றை மோருடன் குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

  • அருகம்புல் சாற்றைத் தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும், உடல் உறுதியாகும், ரத்தம் பெருகும்.

  • அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

  • குழந்தைகளுக்குப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

  • ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

  • இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

  • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி, அதிலிருந்து விடுபடலாம்.

  • உடல் சூட்டையும் தணிக்கிறது.
  • நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்தது.

  • உடல் இளைக்க வேண்டுமானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

  • சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

  • ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு.

  • அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பளபளக்கும்.

  • அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் மென்மையாகி விடும்.

  • கரிசாலை இலை 100 கிராம், தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம், இவற்றை வகைக்கு 25 கிராம் நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி, பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அருந்துதல் நலம். இரத்த விருத்தி, உடல் வலிமை உண்டாகும். சளி மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவுகள் உண்டாகாது.

  • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.