google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Nilavukku enmel
Showing posts with label Nilavukku enmel. Show all posts
Showing posts with label Nilavukku enmel. Show all posts

Wednesday, November 28, 2012

Nilavukku enmel

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக் கண்ணாலே
சிரிப்பவள் நீதானே

சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு