google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Arugam pul / அருகம்புல்

Sunday, August 9, 2009

Arugam pul / அருகம்புல்

CYNODON DACTYLON - அருகம்புல்:


  • காலையில் அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, மண்போகக் கழுவி, வேருடன் அரைத்துச் சாறு பிழியவும்.
    அரைத் தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டிசீரகம், கால் தேக்கரண்டி அதிமதுரம், கால்
    தேக்கரண்டி சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து, சலித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு, அரை டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி நீங்கி விடும்.

  • அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, சலித்து வைத்துக் கொண்டால், பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

  • ஒரு தேக்கரண்டி அருகம்புல் வேர்ப் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.

  • அருகம்புல்லைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, நூறு கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து, இரண்டு பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி நசுக்கி, உப்பையும் அருகம்புல்லையும் சேர்த்துக் கிளரினால் அதுதான் அருகம்புல் பொரியல். இதைச் சாப்பிட்டால் சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

  • அருகம்புல் சாற்றை மோருடன் குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

  • அருகம்புல் சாற்றைத் தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும், உடல் உறுதியாகும், ரத்தம் பெருகும்.

  • அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

  • குழந்தைகளுக்குப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

  • ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

  • இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

  • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி, அதிலிருந்து விடுபடலாம்.

  • உடல் சூட்டையும் தணிக்கிறது.
  • நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்தது.

  • உடல் இளைக்க வேண்டுமானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

  • சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

  • ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு.

  • அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பளபளக்கும்.

  • அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் மென்மையாகி விடும்.

  • கரிசாலை இலை 100 கிராம், தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம், இவற்றை வகைக்கு 25 கிராம் நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி, பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அருந்துதல் நலம். இரத்த விருத்தி, உடல் வலிமை உண்டாகும். சளி மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவுகள் உண்டாகாது.

  • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.





No comments: