- பப்பாளிக் காயின் பாலை முகப்பருவில் தடவினால் பருக்கள் மறைந்து விடும்.
- வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவிச் சற்று சென்றதும் கழுவி விடவும். தொடர்ந்து இவ்வாறு செய்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவான தோற்றத்தை அடையும்.
- வெள்ளரி வில்லைகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து நன்கு கழுவப்பட்ட முகத்தில், மூடிய கண்களின் மீது வைத்து ஓய்வு எடுக்கவும். பின்னர் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
- வெள்ளரிச் சாற்றையும் உருளைக்கிழங்குச் சாற்றையும் கலந்து பஞ்சினால் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
- வெள்ளரியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் செய்து முகத்தில் தடவிக் காயவிட்டு, கழுவினால், தழும்புகள் மறையும்.
- ஒரு தேக்கரண்டி உளுந்தையும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்புகளையும் ஊற வைத்து அரைக்கவும். இதை முகத்தில் தடவி, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவவும். முகம் பொலிவடையும்.
- பாலில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் சென்றபின் முகம் கழுவினால் தோலில் உள்ள துவாரங்கள் திறக்கும். அதனால் தோல் (சருமம்) சுத்தமாகும்.
- முகம் அழகாக முகத்தில் என்ன தடவினாலும் கழுத்துக்கும் சேர்த்தே தடவவும். அப்போது தான் நிறம் வித்தியாசப் படாது.
- முல்தானி மிட்டி என்பது ஒரு வகையான மண். 'Fuller's earth' என்று இதற்குப் பெயர். பருவைப் போக்கவும், கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும் இதை பேக் போடலாம். பன்னீருடன் சேர்த்துப் போட்டால் சிறப்பாக இருக்கும். எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், எண்ணெய்ப் பிசுக்கு முகத்தையும் நல்லபடியாக மாற்றிவிடும்.
- அரிசி மாவுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் தேய்த்துக் கழுவவும். பருக்கள் மறையும். பருவினால் வந்த வடு மறையும். முகம் பளபளப்பாகும்.
- அரிசி மாவுடன் ஆரஞ்சு சாறு கலந்தும் தடவலாம்.
- தக்காளிச் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாரு விட்டு முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் கழுவி விட்டால் முகம் பளபளப்பாகும்.
- கடலை மாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பொலிவடையும்.
- மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவினால் தேவையற்ற முடிகள் (ரோமங்கள்) உதிர்ந்து விடும்.
- வாழைப்பழத்தையும் தேனையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி சுமார் கால் மணி நேரம் ஊற வைத்தால் வறண்ட தோல் மிருதுவாகும்.
- முட்டைக்கோஸ் சாறு , தேன், எலுமிச்சைச் சாறு இம்மூன்றையும் கலந்து கழுத்தில் தேய்த்தால் கருமை நிறம் மாறும்.
- பப்பாளிப்பழத்தின் சதையை வாரம் இருமுறை முகத்தில் தடவினால் முகம் பிரகாசம் அடையும். கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், வடுக்கள் மறையும்.
- கடுமையான வெயில், கடும் குளிர் காலங்களில் வெளியில் அதிகம் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
- புதிய காய்கறிகள் பழங்கள் சாப்பிடவும்.
- நீராவிக் குளியல் சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.
Wednesday, September 2, 2009
Fairness treatment at home
முகம் சிகப்பான அழகு பெற, சிவப்பழகு பெற எளிய வீட்டுக் குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nalla informative tips information.
Post a Comment