காலணி எதுவாக இருந்தாலும் சரி. அது ஷூ, செருப்பு, ஸ்லிப்பர், சாண்டக்ஸ், பெலீஸ், பூட்ஸ் என்று எதுவாக இருந்தாலும் சரியான அளவில் உள்ள தரமானதாகப் பார்த்து வாங்கவேண்டும்.
சரியான அளவைத் தெரிந்து கொள்ள மாலை நேரத்தில் வாங்குவது தான் சிறந்தது. ஏனென்றால், பகல் பொழுதில் நாம் வேலை செய்வதால், மாலை நேரத்தில் நம் கால்கள் சற்று அளவில் பெரியனவாக இருக்கும்.
புதுச் செருப்பை மாட்டிக் கொண்டு சிறிது நடந்து பார்த்து வாங்கவும். விலை மலிவு என்றோ கவர்ச்சியாக இருக்கிறது என்றோ தரம் குறைந்த செருப்புகளை வாங்கினால் நமக்குத்தான் பல வகைகளிலும் தொல்லை.
நீரில் நனையாமல் பார்த்துக் கொள்ளவும்.
குதிகால் உயர்ந்த செருப்பு துன்பம் தரும். முன்னும் பின்னும் ஒரே உயரம் கொண்ட செருப்பு தேவலாம்.
தோல் செருப்பே சிறந்தது.
மழைக் காலத்தில் ரப்பர் செருப்பு அணிவதைத் தவிர்க்கவும்.
பிறருடைய செருப்பை அணியக் கூடாது. அதேபோல யார் இரவல் கேட்டாலும் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
ஷூ போட்டுக் கொண்டதும் கால் விரல்களை ஆட்டிப் பார்க்கவும். விரல்களுக்கும் ஷூவிற்கும் இடையில் நல்ல இடைவெளி தேவை.
எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டும்.
ஷூக்கள் நல்ல பாலிஷ் போடப்பட்டால் நீண்ட காலத்திற்கு வரும்.
No comments:
Post a Comment