google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Life saving earth / ground connection

Thursday, September 24, 2009

Life saving earth / ground connection

Life saving earth / ground connection

எர்த் இணைப்பு உயிரைக் காக்கும்

நாம் அனைவரும் வழக்கமாகப் பயன்படுத்துவது மின்சாரம். நம் எண்ணங்களுக்கு ஏற்ப அதைப் பல வகைகளிலும் பயன்படுத்துகிறோம்.இத்தகைய மின்சாரமானது, பல இடங்களில் உலோகத்தாலான பொருள்களின் மேல் (பாடி) பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. மெயின் சுவிட்சு, அயர்ன் பாக்ஸ், கிரைண்டர் போன்றவற்றில் மின்கசிவு ஏற்படும் போது, நாம் அந்த சாதனங்களைத் தொட்டால் 'ஷாக்' அடித்துவிடும். ஒரு சில நிமிடங்களில் உயிர் போய் விடலாம். மின்சாரத்தில் கை பட்டவுடன் உடலில் பாய்ந்து, கால் வழியாகப் பூமிக்குப் பாய்கிறது. இதனால் இரத்தம் உறைந்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எப்போதும் தேவை.

இப்படிப்பட்ட ஆபத்தைத் தவிர்க்கவே, மின் சாதனங்களில் 'எர்த் இணைப்பு' கொடுக்கப் படுகிறது. நாம் அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அலட்சியப் படுத்தக் கூடாது.


தரையில் சுமார் ஒரு சதுர அடிப் பரப்பில் சுமார் ஆறு அடி குழி தோண்டி, இரும்புக் குழாயை இறக்கி இறுக்கி, கரி, உப்பு, மண் போட்டு மூடி, இரும்புக் குழாயின் மேற்பகுதியில் துளையிட்டு வீட்டில் அல்லது கட்டடத்தில் இருந்து வரும் 'எர்த் வயரை' 'நட்' ஐயும் 'போல்ட்' ஐயும் கொண்டு 'டைட்' ஆக இணைப்பார்கள். தண்ணீரையும் ஊற்றி ஈரம் ஆக்கி விடுவார்கள். இப்படிச் செய்தால், எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்கசிவால் நமக்கு ஷாக் அடிக்காது. அந்த மின்சாரம் உடனடியாக பூமிக்குக் கடத்தப்படும். நம் உயிரும் காப்பாற்றப்படும்.

No comments: