http://severaltips.blogspot.com/2008/07/safe-travel-tips.html
பாதுகாப்பான பயணத்துக்கு சில டிப்ஸ்
- குறைவான லக்கேஜ் எடுத்துச் செல்லுங்கள். பயணம் சுகமாக அமையும்.
- ரயில், பஸ் கால அட்டவணையைத் தெரிந்து வைத்திருங்கள்.
- மாற்றுத் திட்டத்தையும் கைவசம் வைத்திருங்கள்.
- லக்கேஜ்களை டிரெயின் அல்லது பஸ் சீட் கொக்கியுடன் சேர்த்துப் பூட்டி வைக்கவும். மேலும் அதன் மேல் ஒரு கண் இருக்கட்டும்.
- முக்கியமான டாக்குமெண்ட் களின் ஜெராக்ஸ் காப்பி, ஒரு சிறிய டார்ச், முதல் உதவிப் பெட்டி, அட்ரஸ் புத்தகம் போன்றவற்றை வைத்திருக்கவும்.
- ஏதேனும் மருந்து கொண்டு சென்றால் மருந்துச் சீட்டையும் உங்களுடன் கொண்டு செல்லவும்.
- ஆடம்பரமாக வெளியில் காட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும்.
- பொது இடங்களில் பணத்தை வெளியே காட்டாதீர்கள்.
- பிக்பாக்கெட் என்னும் ஜேப்படித் திருடர்கள் இருப்பார்கள். கவனம்.
- குற்ற நடவடிக்கைகள் நிரம்பிய பகுதிகளில் தனியே செல்லாதீர்கள்.
- பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்.
- தெரியாதவர்களிடம் இருந்து எந்த உணவையும் பானத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களை மயக்கப் படுத்தி, திருடிவிட்டு ஓடி விடுவார்கள்.
- பயணம் செய்யும் நேரம், பாதை போன்றவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கவும்.
- பயணத்திட்டம், ரூம் நம்பர், சொந்த விபரங்கள் போன்றவற்றை பிறர் காதுகளில் விழும் வண்ணம் சத்தமாகப் பேசாதீர்கள்.
- கைவசம் சில்லறை தாராளமாக இருக்கட்டும்.டாக்ஸி, ஹோட்டல் பில் செலுத்த வசதியாக இருக்கும்.
சுகமான பயணத்துக்கு என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment