ஆங்கமை
வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை
வில்லாத நாடு.
--திருக்குறள் 740 அதிகாரம் நாடு
மு. வரதராசன் உரை:
நல்ல அரசன் பொருந்தாத நாடு,
மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும்
அவற்றால் பயன் இல்லாமற் போகும்.
மு. கருணாநிதி உரை:
நல்ல அரசு அமையாத நாட்டில்
எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற்
போகும்.
சாலமன்
பாப்பையா உரை:
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள்
மீது அன்பு இல்லாத அரசு
அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும்
இல்லை.
மணக்குடவர்
உரை:
மேற்கூறியவற்றால்
எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு.
இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.
பரிமேலழகர்
உரை:
வேந்து
அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு
மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு
அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
- மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே,
குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது).
Translation:
Though blest with all these varied gifts' increase,
A land gains nought that is not with its king at peace.
Explanation:
Although in possession of all the above mentioned
excellences, these are indeed of no use to a country, in the absence of harmony
between the sovereign and the subjects.
No comments:
Post a Comment