ஒரு நாள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த பொன் புதுப்பட்டி(PON.Puduppatti, Ponnamaravathi of Pudukkottai District) கடிகாரம் ரிப்பேர் செய்யும் பெட்டி நாயக்கர் என்ற சிறந்த மனிதர், அவ்வூரில் தகர வேலை செய்யும் மு.நடராசன் ஆசாரி M.Natarajan Achari) என்பவரிடம் ஒரு பெரிய சுவர்க் கடிகாரத்தின் (Grandfather’s clock) உடைந்து போன கண்ணாடியை மாற்றித் தரும்படிக் கூறினார். அவசர வேலை இது என்று கேட்டுக்கொண்டார். அப்போது இருட்டிவிட்டது. ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் உடனேயே வேலையை ஆரம்பித்தார், அந்த ஏரியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற அந்த ஆசாரி. ஒரு கண்ணாடியை எடுத்து விறுவிறுவென்று அதை வட்டமாக அறுக்கத் தொடங்கினார். அந்நேரம் விளக்கை யாரோ தவறுதலாகத் தட்டி விடவே, சுற்றிலும் இருள் சூழ்ந்தது. ஆசாரியோ இருட்டிலும் கொண்ட கடமையிலேயே கண்ணாக இருந்தார். விளக்கு ஏற்றப் பட்டது. என்ன ஆச்சரியம்! கடிகாரமானது புதுக் கண்ணாடி மாட்டப்பட்டிருந்தது.
இத்தகைய தன்னம்பிக்கையுடன் வேலை செய்த இவருக்கு இப்போது வயது எண்பத்திரெண்டு. தளர்ந்துவிட்ட இவருக்கு இப்போதும் எழுபத்திரெண்டு வயதான மனைவி திருமதி ந.தனலெட்சுமி தக்க துணையுடன் இருக்கிறார்.
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம்.
No comments:
Post a Comment