இஞ்சி டீ
இந்தத் தேநீரானது , காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளிலிருந்து நம்மை விடுதலை செய்யும்.
தேவையான பொருட்கள்:
- டீத்தூள் - இரண்டு தேக்கரண்டி
- தோல் நீக்கி நசுக்கப்பட்ட இஞ்சி -ஒரு சிறிய துண்டு
- மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
- சர்க்கரை அல்லது சீனி - இரண்டு தேக்கரண்டி
- காய்ச்சப்பட்ட பால் - நூறு மி.லி.
செய்முறை:
- சுமார் நானூறு மில்லி நீரைக் கொதிக்க வைத்து, பாலையும் சர்க்கரையையும் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, தொடர்ந்து கொதிக்க வைத்து, வடிகட்டி, அதன் பின் சூடான பாலையும், சர்க்கரையையும் கலந்து பார்த்தால், ஆஹா என்ன அருமையான வாசமான சுவையான இஞ்சி டீ!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பொன்னமராவதி கீழவட்டம் புதுப்பட்டி (பொன். புதுப்பட்டி) என்ற ஊரில், தகர வேலை செய்வதில் மிகவும் பிரபலமானவர் திரு மு நடராஜன் ஆச்சாரி. [Mr. M. Natarajan Achari, An efficient, famous, reputed tinsmith (tinker), of Pudupatti (PON. Puduppatti), Ponnamaravathi keezhavattam, Ponnamaravathi taluk, Pudukkottai district, Tamilnadu , India .]
அவர் இரவு பகல் பாராது உழைக்கும் பண்பினர். தான் வேலை செய்யும் போதே இதுபோன்ற டீயை அவராகவே போட்டுக் குடித்துக் கொள்வார்.
அவர் இரவு பகல் பாராது உழைக்கும் பண்பினர். தான் வேலை செய்யும் போதே இதுபோன்ற டீயை அவராகவே போட்டுக் குடித்துக் கொள்வார்.
No comments:
Post a Comment