google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Sidda Home Treatment

Sunday, October 3, 2010

Sidda Home Treatment


அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.


குடல்புண் அல்லது குடல் அல்சர்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து தேன் கலந்து சாப்பிடவும்.


உதடு வெடிப்பு
கரும்பு சக்கையை எரித்துச் சாம்பலாக்கி வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வரவும்.


சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற  வைத்து நெஞ்சில் தடவவும்.


தலைவலி
ஐந்து துளசி இலைகள், ஒரு துண்டு சுக்கு, இரண்டு  லவங்கம் ஆகியவற்றைச்   சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடவும்.


தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடவும்.


தொடர் விக்கல்
நெல்லிக்காய் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிடவும்.


வாய் நாற்றம்
படிகாரம் காய்ச்சிய நீரில் ஒரு நாளைக்கு மூன்று வேளையாக  வாய் கொப்பளித்து வரவும்.


சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிடவும்.


பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வரவும்.



தேமல்
வெள்ளைப்  பூண்டை வெற்றிலையுடன்  மசிய அரைத்து ஒவ்வொரு நாளும்  தேய்த்துக்  குளித்து வரவும்.


மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளைப் பொடியாக்கி ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிடவும்.


வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் அருந்தவும்.


வயிற்றுப்புண் மற்றும் வாயுத் தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூள் செய்து  வெந்நீரில் அருந்தவும்.

No comments: