google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Tips to maintain silk saree

Saturday, August 8, 2009

Tips to maintain silk saree

The following tips in Tamil are very much useful to keep and use silk sarees, saris, saree, sari, for a long time.
To view the tips in English, Visit

http://severaltips.blogspot.com/2009/08/tips-to-maintain-silk-saris-sarees.html

  • பட்டுப் புடவையை அட்டைப்பெட்டியில் வைக்காமல் மென்மையான துணிப்பையில் வைக்கவும்.

  • இரும்பு பீரோவில் வைக்க நேர்ந்தால் மெல்லிய பருத்தித் துணியில் சுற்றி வைக்கவும்.

  • புதிதாக வாங்கும் பட்டுப் புடவையை ஆறு மாதத்துக்குள் துவைத்து விடவேண்டும்.

  • அதிலிருக்கும் கஞ்சி, நீக்கப்படாமலிருந்தால் துணிக்குத்தான் பாதிப்பு.

  • முதல் முறையாக அலசும்போது ஒரே சமயத்தில் அலசாமல், உடல் பகுதியைத் தனியாகவும்,பார்டர் பகுதியைத் தனியாகவும் அலசவும்.

  • தரமான லிக்விட் சோப் கொண்டு துவைக்கவும். நீண்ட நேரம் ஊறவைப்பதோ, அடித்துத் துவைப்பதோ கூடாது.

  • அழுக்கோ, கறையோ உள்ள இடங்களைக் கைகளாலேயே மென்மையாகத் தேய்க்கவும்.

  • தண்ணீரில் பல புடவைகளை ஒரே சமயத்தில் நனைக்கக் கூடாது. ஒரு புடவையின் சாயம் பல புடவைகளில் ஒட்டிக் கொள்ளும்.

  • சுத்தமான நீரில் அலசவும். இரு முறை தண்ணீரில் அலசுவது அவசியம்.

  • முறுக்கிப் பிழியாமல் இலேசாகக் கொசுவி உதறவும். முறுக்கிப் பிழிந்தால் இழை இற்றுப் போகும்.

  • நிழலில், காற்றாட, பார்டர் கீழே வருவது போல, காய விடவும்.

  • பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே போய் வந்தால், முதல் வேலையாக, காற்றாட ஆறப் போட்டு, வியர்வை வாடை போனதும் அயர்ன் செய்து வைக்கவும்.

  • பட்டுப் புடவையைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நீண்டகாலம் உழைக்காது. அடிக்கடி கட்டி, துவைத்துப் பராமரிக்கப்படும் புடவைதான் நீண்டகாலம் உழைக்கும்.

  • அடிக்கடி உபயோகிக்காவிட்டாலும், அவ்வப்போது எடுத்து, பிரித்து, மாற்றி மடிக்க வேண்டும்.

  • புடவையைத் திருப்பி வைத்து மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.

  • ஒரு பக்கெட் நீரில் சில சொட்டுகள் வேப்பிலைச்சாறு விட்டு அலசினால் பூச்சி அரிக்காது.

  • பட்டுப் புடவையில் ஒரு வசம்பு வைத்தால் பூச்சி அரிக்காது.

  • பட்டுப் புடவையில், சென்ட்டோ வாசனைத் திரவியமோ நேரடியாகப் படும்படி பயன்படுத்தக்கூடாது. இதனால் கறைபடிந்து எளிதில் மங்கிவிடும்.

No comments: