google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Tirumagal Vazhipadu

Saturday, December 18, 2010

Tirumagal Vazhipadu


  1. ஓம் திருவே போற்றி
  2. ஓம் திருவளர் தாயே போற்றி
  3. ஓம் திருமாலின் தேவி போற்றி
  4. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
  5. ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
  6. ஓம் திருப்புக முடையாய் போற்றி
  7. ஓம் திருஞான வல்லி போற்றி
  8. ஓம் திருவருட் செல்வி போற்றி
  9. ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
  10. ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி 

  1. ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
  2. ஓம் தீப சோதியே போற்றி
  3. ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
  4. ஓம் தூப சோதியே போற்றி
  5. ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி
  6. ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
  7. ஓம் தருவழு தருள்வாய் போற்றி
  8. ஓம் அன்னையே அருளே போற்றி
  9. ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
  10. ஓம் அயன்பெறு தாயே போற்றி 

  1. ஓம் அறுமுகன் மாமி போற்றி
  2. ஓம் அமரர்குல விளக்கே போற்றி
  3. ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
  4. ஓம் அன்பருக் கினியாய் போற்றி
  5. ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
  6. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
  7. ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
  8. ஓம் ஆவிநல் வடிவே போற்றி
  9. ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
  10. ஓம் இச்சை கிரியை போற்றி 

  1. ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
  2. ஓம் இன்ப பெருக்கே போற்றி
  3. ஓம் இகபர சுகமே போற்றி
  4. ஓம் ஈகையின் பொலிவே போற்றி
  5. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
  6. ஓம் எண்குண வல்லி போற்றி
  7. ஓம் ஓங்கார சக்தி போற்றி
  8. ஓம் ஒளிமிகு தேவி போற்றி
  9. ஓம் கற்பக வல்லி போற்றி
  10. ஓம் காமரு தேவி போற்றி 

  1. ஓம் கனக வல்லியே போற்றி
  2. ஓம் கருணாம் பிகையே போற்றி
  3. ஓம் குத்து விளக்கே போற்றி
  4. ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
  5. ஓம் மங்கல விளக்கே போற்றி
  6. ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
  7. ஓம் தூங்காத விளக்கே போற்றி
  8. ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
  9. ஓம் பங்கச வல்லி போற்றி
  10. ஓம் பாவலர் பணிவாய் போற்றி 

  1. ஓம் பொன்னி அம்மையே போற்றி
  2. ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
  3. ஓம் நாரணன் நங்கையே போற்றி
  4. ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
  5. ஓம் நவரத்தின மணியே போற்றி
  6. ஓம் நவநிதி நீயே போற்றி
  7. ஓம் அஷ்டலக் குமியே போற்றி
  8. ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
  9. ஓம் ஆதிலட்சுமியே போற்றி
  10. ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி 

  1. ஓம் கஜலட்சுமியே போற்றி
  2. ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
  3. ஓம் தைரியலட் சுமியே போற்றி
  4. ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
  5. ஓம் தனலட் சுமியே போற்றி
  6. ஓம் தனதானியம் தருவாய் போற்றி
  7. ஓம் விஜயலட் சுமியே போற்றி
  8. ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
  9. ஓம் வரலட் சுமியே போற்றி
  10. ஓம் வரமெலாம் தருவாய் போற்றி 

  1. ஓம் முத்துலட் சுமியே போற்றி
  2. ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
  3. ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி
  4. ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
  5. ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி
  6. ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
  7. ஓம் விண்ணேஎம் விதியே போற்றி
  8. ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
  9. ஓம் பொன்னேநன் மணியே போற்றி
  10. ஓம் போகம தருள்வாய் போற்றி 

  1. ஓம் பூதேவி தாயே போற்றி
  2. ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
  3. ஓம் சீதேவி தாயே போற்றி
  4. ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
  5. ஓம் மதிவதன வல்லி போற்றி
  6. ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
  7. ஓம் நித்திய கல்யாணி போற்றி
  8. ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
  9. ஓம் கமலக் கன்னி போற்றி
  10. ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி 

  1. ஓம் தாமரைத் தாளாய் போற்றி
  2. ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
  3. ஓம் கலைஞானச் செல்வி போற்றி
  4. ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
  5. ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
  6. ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
  7. ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
  8. ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
  9. ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
  10. ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி

  1. ஓம் வேத வல்லியே போற்றி
  2. ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
  3. ஓம் பெரியோர்க் கருள்வாய் போற்றி
  4. ஓம் நல்லவர்க் கருள்வாய் போற்றி
  5. ஓம் அடியவர்க் கருள்வாய் போற்றி
  6. ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
  7. ஓம் அருள்இலக் குமியே போற்றி
  8. ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி

No comments: