google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: கையில வாங்கினேன் பையிலே போடல்லே

Sunday, September 19, 2010

கையில வாங்கினேன் பையிலே போடல்லே


திருச்சி லோகநாதன் பாடியது (இரும்புத் திரை)

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே - என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதுன்னும் தெரியல்லலே
ஏழைக்குக் காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

மாசம் முப்பது நாளும் உளச்சி
வருமை புடிச்சு உருவம் இளச்சு
காசை வாங்கினா கடங்காரன் எல்லாம்
கணக்கு நோ்ட்டோட நிக்கிறான் வந்து
எனக்கு ஒனக்குன்னு பிக்கிறான்
காசை வாங்கினா கடங்காரன் எல்லாம்
கணக்கு நோ்ட்டோட நிக்கிறான் வந்து
எனக்கு ஒனக்குன்னு பிக்கிறான்

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

சொட்டு சொட்டாய் வேர்வை விட்டா
பட்டினியாய் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேறுது
கெட்டிக்காரன் பொட்டியிலே அது
குட்டியும் போடுது வட்டியிலே
கட்டுக்கட்டா நோட்டுச் சேறுது
கெட்டிக்காரன் பொட்டியிலே அது
குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

விதவிதமா துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகை வகையாய் நகைகள் இருக்கு
மடியைப் பாத்தா மயக்கம் வருது
எதை எதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்குது வழியில்லே இதை
எண்ணாமலிருக்கவும் முடியலலே
எதை எதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்குது வழியில்லே இதை
எண்ணாமலிருக்கவும் முடியலலே

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொணணுக்குத் துணையாய் ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தப் படைச்சான்
ஒலகம் நெறைய இன்பத்தப் படைச்சான்
என்னைப் போலப் பலரையும் படைச்சி - அண்ணே
என்னைப் போலப் பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே

காசு போன இடம் தெரியல்லே

No comments: