google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: கண்ணதாசன் அவர்களின் அத்திக்காய் காய் காய்

Wednesday, September 8, 2010

கண்ணதாசன் அவர்களின் அத்திக்காய் காய் காய்

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா

(அத்திக்காய்)

No comments: