google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Desire is like a Wave

Sunday, September 19, 2010

Desire is like a Wave

திருச்சி லோகநாதன் பாடியது 
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார்
அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன் வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா? மணம் பெறுமா?
முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆ..ஆ..

No comments: