இறைவனை அர்ச்சிக்க உதவும் பூக்கள்:
- விநாயகர் - செம்பருத்தி, தாமரை, ரோஜாமலர், அருகம்புல்.
- முருகன் - மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி.
- அம்மன் -மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை.
- சிவன் -தும்பை, வில்வம, செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம் (நந்தியாவட்டை), செண்பகம்.
- விஷ்ணு - தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி.
மலர்களால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பயன்கள்:
- தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.
- ரோஜா -சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.
- அருகம்புல் -கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.
- எருக்கம் பூ -பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.
- செம்பருத்தி, அரளி -தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.
- முல்லை, மல்லிகை -புனிதத்தன்மை தரும். சமநிலை அளிக்கும்.
- துளசிப்பூவும் இலையும் -பக்தி தரும்.
- மருக்கொழுந்து -வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.
- பவளமல்லி -சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.
- நந்தியாவட்டம் -பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment