google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: August 2009

Monday, August 24, 2009

Road accident

சாலை விபத்து


எதிரே வருபவர் எமன்
எனக் கெதிரே வருபவர் எவரென்றாலும்
எதிரே வருபவர் எமன் - இது
புதிரல்ல புது ஞானம்.

மெதுவாய் பைக்கில் போனேன்
அழகாய் மனைவி என் முதுகின் பின்னே
வந்தது குறுக்கே திடீரென்று, அப்படி
வரக்கூடாத ஒரு டூவீலர்.

கண்ணிமைக்கும் நேரத்திலே
கடினமாய் மோதிய வேகத்திலே
அதிர்ந்தது ரோடு; கூடியது ஊரு
சொறுகின என் கண்கள்; எங்கே என் துணைவி?

நெஞ்சடி எனக்கு
இடுப்படி அவளுக்கு
பொடிப்பொடியாயின
பைக்கின் பாகங்கள்.

கூடிய மக்கள் நல்லவர்கள் - சும்மா
வேடிக்கை பார்க்கவே இல்லை அவர்கள்
உடனடி உதவிகள் செய்து - நாங்கள்
உயிர் பிழைத்திருக்க வைத்தவர்கள்.

அன்று நடந்தது விபத்து
என்று தொலையும் இந்த ஆபத்து
சாலையில் கவனம் செலுத்து என்றேன்
சாலை விதிகளை மதிப்போம் என்றேன்.

அதுமுதல் என் மனம் சொல்கிறது
கவனம் கவனம் கவனம்
எதிரே திடீரென வருவர்
காற்றினும் கடுகி மறைவர்.

கவனம் தேவை எப்போதும்
எதிரே வருபவர் எமன்!

Saturday, August 22, 2009

Footwear tips

    Tips to buy and maintain footwear in Tamil
காலணி வாங்குவதும் பாதுகாப்பதும் எப்படி?


  • காலணி எதுவாக இருந்தாலும் சரி. அது ஷூ, செருப்பு, ஸ்லிப்பர், சாண்டக்ஸ், பெலீஸ், பூட்ஸ் என்று எதுவாக இருந்தாலும் சரியான அளவில் உள்ள தரமானதாகப் பார்த்து வாங்கவேண்டும்.
  • சரியான அளவைத் தெரிந்து கொள்ள மாலை நேரத்தில் வாங்குவது தான் சிறந்தது. ஏனென்றால், பகல் பொழுதில் நாம் வேலை செய்வதால், மாலை நேரத்தில் நம் கால்கள் சற்று அளவில் பெரியனவாக இருக்கும்.
  • புதுச் செருப்பை மாட்டிக் கொண்டு சிறிது நடந்து பார்த்து வாங்கவும். விலை மலிவு என்றோ கவர்ச்சியாக இருக்கிறது என்றோ தரம் குறைந்த செருப்புகளை வாங்கினால் நமக்குத்தான் பல வகைகளிலும் தொல்லை.
  • நீரில் நனையாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • குதிகால் உயர்ந்த செருப்பு துன்பம் தரும். முன்னும் பின்னும் ஒரே உயரம் கொண்ட செருப்பு தேவலாம்.
  • தோல் செருப்பே சிறந்தது.
  • மழைக் காலத்தில் ரப்பர் செருப்பு அணிவதைத் தவிர்க்கவும்.
  • பிறருடைய செருப்பை அணியக் கூடாது. அதேபோல யார் இரவல் கேட்டாலும் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • ஷூ போட்டுக் கொண்டதும் கால் விரல்களை ஆட்டிப் பார்க்கவும். விரல்களுக்கும் ஷூவிற்கும் இடையில் நல்ல இடைவெளி தேவை.
  • எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
  • சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டும்.
  • ஷூக்கள் நல்ல பாலிஷ் போடப்பட்டால் நீண்ட காலத்திற்கு வரும்.

Sunday, August 16, 2009

Safe Travel Tips In Tamil

To view safe travel tips in English, visit

http://severaltips.blogspot.com/2008/07/safe-travel-tips.html

பாதுகாப்பான பயணத்துக்கு சில டிப்ஸ்

  • குறைவான லக்கேஜ் எடுத்துச் செல்லுங்கள். பயணம் சுகமாக அமையும்.
  • ரயில், பஸ் கால அட்டவணையைத் தெரிந்து வைத்திருங்கள்.
  • மாற்றுத் திட்டத்தையும் கைவசம் வைத்திருங்கள்.
  • லக்கேஜ்களை டிரெயின் அல்லது பஸ் சீட் கொக்கியுடன் சேர்த்துப் பூட்டி வைக்கவும். மேலும் அதன் மேல் ஒரு கண் இருக்கட்டும்.
  • முக்கியமான டாக்குமெண்ட் களின் ஜெராக்ஸ் காப்பி, ஒரு சிறிய டார்ச், முதல் உதவிப் பெட்டி, அட்ரஸ் புத்தகம் போன்றவற்றை வைத்திருக்கவும்.
  • ஏதேனும் மருந்து கொண்டு சென்றால் மருந்துச் சீட்டையும் உங்களுடன் கொண்டு செல்லவும்.
  • ஆடம்பரமாக வெளியில் காட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும்.
  • பொது இடங்களில் பணத்தை வெளியே காட்டாதீர்கள்.
  • ிக்பாக்கெட் என்னும் ஜேப்படித் திருடர்கள் இருப்பார்கள். கவனம்.
  • குற்ற நடவடிக்கைகள் நிரம்பிய பகுதிகளில் தனியே செல்லாதீர்கள்.
  • பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்.
  • தெரியாதவர்களிடம் இருந்து எந்த உணவையும் பானத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ங்களை மயக்கப் படுத்தி, திருடிவிட்டு ஓடி விடுவார்கள்.
  • பயணம் செய்யும் நேரம், பாதை போன்றவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கவும்.
  • யணத்திட்டம், ரூம் நம்பர், சொந்த விபரங்கள் போன்றவற்றை பிறர் காதுகளில் விழும் வண்ணம் சத்தமாகப் பேசாதீர்கள்.
  • கைவசம் சில்லறை தாராளமாக இருக்கட்டும்.டாக்ஸி, ஹோட்டல் பில் செலுத்த வசதியாக இருக்கும்.

சுகமான பயணத்துக்கு என் வாழ்த்துக்கள்.

Sunday, August 9, 2009

Arugam pul / அருகம்புல்

CYNODON DACTYLON - அருகம்புல்:


  • காலையில் அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, மண்போகக் கழுவி, வேருடன் அரைத்துச் சாறு பிழியவும்.
    அரைத் தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டிசீரகம், கால் தேக்கரண்டி அதிமதுரம், கால்
    தேக்கரண்டி சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து, சலித்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் வெந்நீரில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு, அரை டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி நீங்கி விடும்.

  • அருகம்புல் வேரை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, சலித்து வைத்துக் கொண்டால், பலநோய்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

  • ஒரு தேக்கரண்டி அருகம்புல் வேர்ப் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும்.

  • அருகம்புல்லைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, நூறு கிராம் பாசிப்பருப்பை வேகவைத்து, இரண்டு பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி நசுக்கி, உப்பையும் அருகம்புல்லையும் சேர்த்துக் கிளரினால் அதுதான் அருகம்புல் பொரியல். இதைச் சாப்பிட்டால் சத்தும் ஞாபகசக்தியும் பெருகும்.

  • அருகம்புல் சாற்றை மோருடன் குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

  • அருகம்புல் சாற்றைத் தேனுடன் கலந்து குடித்தால் தாது விருத்தி ஏற்படும், உடல் உறுதியாகும், ரத்தம் பெருகும்.

  • அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

  • குழந்தைகளுக்குப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

  • ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

  • இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

  • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி, அதிலிருந்து விடுபடலாம்.

  • உடல் சூட்டையும் தணிக்கிறது.
  • நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்தது.

  • உடல் இளைக்க வேண்டுமானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

  • சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

  • ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு.

  • அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பளபளக்கும்.

  • அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் மென்மையாகி விடும்.

  • கரிசாலை இலை 100 கிராம், தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம், இவற்றை வகைக்கு 25 கிராம் நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி, பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அருந்துதல் நலம். இரத்த விருத்தி, உடல் வலிமை உண்டாகும். சளி மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவுகள் உண்டாகாது.

  • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.





Saturday, August 8, 2009

Tips to maintain silk saree

The following tips in Tamil are very much useful to keep and use silk sarees, saris, saree, sari, for a long time.
To view the tips in English, Visit

http://severaltips.blogspot.com/2009/08/tips-to-maintain-silk-saris-sarees.html

  • பட்டுப் புடவையை அட்டைப்பெட்டியில் வைக்காமல் மென்மையான துணிப்பையில் வைக்கவும்.

  • இரும்பு பீரோவில் வைக்க நேர்ந்தால் மெல்லிய பருத்தித் துணியில் சுற்றி வைக்கவும்.

  • புதிதாக வாங்கும் பட்டுப் புடவையை ஆறு மாதத்துக்குள் துவைத்து விடவேண்டும்.

  • அதிலிருக்கும் கஞ்சி, நீக்கப்படாமலிருந்தால் துணிக்குத்தான் பாதிப்பு.

  • முதல் முறையாக அலசும்போது ஒரே சமயத்தில் அலசாமல், உடல் பகுதியைத் தனியாகவும்,பார்டர் பகுதியைத் தனியாகவும் அலசவும்.

  • தரமான லிக்விட் சோப் கொண்டு துவைக்கவும். நீண்ட நேரம் ஊறவைப்பதோ, அடித்துத் துவைப்பதோ கூடாது.

  • அழுக்கோ, கறையோ உள்ள இடங்களைக் கைகளாலேயே மென்மையாகத் தேய்க்கவும்.

  • தண்ணீரில் பல புடவைகளை ஒரே சமயத்தில் நனைக்கக் கூடாது. ஒரு புடவையின் சாயம் பல புடவைகளில் ஒட்டிக் கொள்ளும்.

  • சுத்தமான நீரில் அலசவும். இரு முறை தண்ணீரில் அலசுவது அவசியம்.

  • முறுக்கிப் பிழியாமல் இலேசாகக் கொசுவி உதறவும். முறுக்கிப் பிழிந்தால் இழை இற்றுப் போகும்.

  • நிழலில், காற்றாட, பார்டர் கீழே வருவது போல, காய விடவும்.

  • பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே போய் வந்தால், முதல் வேலையாக, காற்றாட ஆறப் போட்டு, வியர்வை வாடை போனதும் அயர்ன் செய்து வைக்கவும்.

  • பட்டுப் புடவையைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நீண்டகாலம் உழைக்காது. அடிக்கடி கட்டி, துவைத்துப் பராமரிக்கப்படும் புடவைதான் நீண்டகாலம் உழைக்கும்.

  • அடிக்கடி உபயோகிக்காவிட்டாலும், அவ்வப்போது எடுத்து, பிரித்து, மாற்றி மடிக்க வேண்டும்.

  • புடவையைத் திருப்பி வைத்து மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.

  • ஒரு பக்கெட் நீரில் சில சொட்டுகள் வேப்பிலைச்சாறு விட்டு அலசினால் பூச்சி அரிக்காது.

  • பட்டுப் புடவையில் ஒரு வசம்பு வைத்தால் பூச்சி அரிக்காது.

  • பட்டுப் புடவையில், சென்ட்டோ வாசனைத் திரவியமோ நேரடியாகப் படும்படி பயன்படுத்தக்கூடாது. இதனால் கறைபடிந்து எளிதில் மங்கிவிடும்.