அழிக்கும் தொழில் செய்யும் கடவுள் சிவன்;
அயராது காக்கும் தொழிலுடையார் டாக்டர் சதாசிவம்.
அருமைமிகு பொன்னமராவதியின்
பெருமைமிகு டாக்டர் இவர்.
ஆறுமுகத்திற்கு வந்தது கடுங் காய்ச்சல்; டாக்டரை
அவசரமாய்ப் போய்ப் பார்த்தார் சளி அவதியுடன்.
சளிநிறை நெஞ்சுடன் மட்டுமல்ல;
சரியான நம்பிக்கை மனதுடனும்தான்.
ஏறுநடை ஏர்போர்ஸ் வீரா! என்னாயிற்று?
என்று ஏற்றினார் இரண்டு ஊசி அடுத்தடுத்து .
தொலைந்தது காய்ச்சல் அக்கணமே; பின்பு
ஒழிந்தது சளி என்னும் சனி மெதுவாகவே
அழிக்கும் தொழில் செய்யும் கடவுள் சிவன்;
விழிப்புடன் காப்பவரோ டாக்டர் சதாசிவம்.
அவர் வாழ்க; அவர் போடும் ஊசி வாழ்க;
அனைவரும் வாழ்க! வாழ்கவே!
(ஆறுமுகம் என்பவர் பொன்.புதுப்பட்டி தகரக்கடை (தகரவேலை) மு. நடராசன் ஆச்சாரி என்னும் கடும் உழைப்பாளியின் மகன் ஆவார். இவரே ஸ்கைலேப் பழனியப்பன் என்னும் அருமைத் தம்பியை உடையவர்.)
(N. Arumugham is the son of a hard working tinsmith, Mr. M. Natarajan Achari, of PON. Puduppatti. He has a nice younger brother, popularly called Skylab Palaniappan.)
No comments:
Post a Comment