google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: முருக பக்திப் பாடல்கள்

Saturday, March 27, 2010

முருக பக்திப் பாடல்கள்

முருகன் துணை

கந்தன் திருநீறணிந்தால்


கந்தன் திருநீறணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(
கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(
கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா

தினம்தினம் நெற்றியிலே
திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(
கந்தன்)
_____________________________________________________________

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(
உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(
உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(
உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(
உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(
உள்ளம்)
______________________________


கற்பனை என்றாலும்


கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(
கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(
கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(
கற்பனை)
____________________________

அழகென்ற சொல்லுக்கு

முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

__________________________________________

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.

________________________________________________

No comments: