சமையல் கேஸ், நேரம் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தும் எளிய வழிகள்
- பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
- அடி பெருத்த பாத்திரத்தில் சமைக்கவும்.
- சிறிய பர்னரைப் பயன்படுத்தவும்.
- பாத்திரத்திற்கு வெளியே தீ தெரியாவண்ணம் குறைவாகவே இருக்கட்டும்.
- ஊறவைத்து வேகவைக்கவும்.
- சமையலின் இடையில் தேவையான பொருட்களைத் தேடாமல் முன்கூட்டியே அருகில் வைத்துக் கொள்ளவும்.
- வேண்டிய அளவு நீரை மட்டும் சேர்த்தால் போதுமானது.
- பாத்திரத்தை மூடிவைத்துச் சமைக்கவும்.
- சமைக்கத் தொடங்குவதற்கு வெகு முன்னதாகவே குளிரூட்டும் பெட்டியிலிருந்து தேவைப்படும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- சமைத்தபின் முடிந்தவரை எல்லோரும் சீக்கிரமாகச் சாப்பிட்டு விடவும்.
No comments:
Post a Comment