ஏழாவது சம்பளக்
கமிஷன் அமைகிறது
செப்டம்பர் மாதம் 25
ஆம் தேதி 2013 அன்று, இந்திய மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான ஊதியம்,
விலைவாசிக்கு ஏற்ப அமையவேண்டும் என்பதன்படி, ஏழாவது சம்பளக் கமிஷன் அமைய வேண்டும்
என்று ஆணையிட்டு உள்ளது. இக்கமிஷனின் பரிந்துரைகள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்
படுத்தப்படும்.
இதனால் மத்திய
அரசின் ஐம்பது லட்சம் ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வு ஊதியம்
பெறுவோரும் பயன் பெறுவர்.
நான்காம் சம்பளக்
கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1986 ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.
ஐந்தாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1996
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம்
தேதியிலிருந்து.
ஆறாம் சம்பளக் கமிஷன்
அமல்படுத்தப்பட்டது 2006 ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.
No comments:
Post a Comment