கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின் வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின் மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
காளமேகப் புலவர் ஒரு நாள் மோர் விற்கும் பெண்ணிடம் இருந்து மோர் வாங்கி அருந்தினார். அந்த மோர் மிகவும் தண்ணீர் கலந்ததாக இருந்தது. அதையே சிலேடை என்னும் இரட்டுற மொழிதலில் நீரானது அந்தப் பெண்மணியின் கை பட்டு மோர் ஆனதாகப் பாடுவதுபோல் மேற்கண்ட பாடலில் குறை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment