google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Tips: August 2010
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அகத்தின் அழகு முகத்திலே.
- அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா.
அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான்.
அஞ்சிலே வளையாதது அம்பதில் வளையுமா?
- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு.
அடியாத மாடு படியாது.
- அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும்.
அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.
அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .
- அம்மாவை ஆத்தங்கரையில் பார்த்தா பிள்ளையை வீட்டுல போய் பார்க்கவேண்டாம்.
- அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை.
- அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
- அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
- அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அரை காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்.
- அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.
- அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது.
- அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
- அழுதாலும் தொழுதாலும் அவதான் பிள்ளை பெறணும்.
- அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
- அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
- அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
- அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
- ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்.
- ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க.
- ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்.
- ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
- ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
- ஆடிப் பட்டம் தேடி விதை.
- ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.
- ஆடு பகை குட்டி உறவா?
- ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
- ஆடையில்லாதவன் அரை மனிதன்.
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
- ஆற்றிலே போகுது தண்ணீர் அப்பா குடி ஆத்தாள் குடி.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
- ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
- இக்கரைக்கு அக்கரை பச்சை.
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை.
- இரைக்கிற ஊற்றே சுரக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
- இளங்கன்று பயமறியாது.
- இளமையில் கல்.
- இறந்த காலத்தை என்றும் பெற இயலாது.
- இனம் இனத்தையே சாரும்.
- இனம் இனத்தோடு சேரும்.
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
- ஈர நாவிற்கு எலும்பில்லை.
- உடுத்திக் கெட்டான் பார்ப்பான், உண்டு கெட்டான் வெள்ளாளன்.
- உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
- உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
- உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உயிர் காப்பான் தோழன்.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
- உரலு போயி மத்தளத்துக்கிட்ட முறையிட்டதாம்.
- உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
- உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
- ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்.
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
- ஊருடன் ஒட்டி வாழ்.
- ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
- எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
- எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
- எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
- எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்.
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
- எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
- எலி வளையானாலும் தனி வளை.
- எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
- எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
- எறும்பூரக் கல்லும் தேயும்.
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை.
ஏழை என்றால் மோழையும் பாயும்.
- ஏழை சொல் அம்பலம் ஏறாது.
- ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாப்பெண்ணும் கறி சமைப்பாள்.
- ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள்.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
- ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.
- ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
- ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக் கொன்றவன் பட்டமாள்வான்.
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
- ஓட்டுல புட்டவிச்சு உமிக்காந்தல்ல களி கிண்டிருவா.
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
- ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
- ஓருவனுக்கு ஒருத்தி.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
- கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
- கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
- கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
- கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
- கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
- கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
- கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
- கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
- கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
- கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
- கரும்பு தின்னக் கூலியா?
- கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
- கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
- கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
- கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
- கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது.
- கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
- கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
- கழுதை அறியுமா கற்பூர வாசனை?
- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
- கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை.
- கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
- கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
- காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.
- காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல.
- காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
- காகம் திட்டி மாடு சாகாது.
- காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
- காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.
- காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
- காலம் போகும் வார்த்தை நிற்கும்.
- காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
- காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- கிட்டாதாயின் வெட்டென மற.
- கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
- கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
- கிளி பிடித்ததோ,புலி பிடித்ததோ?
குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்.
- குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
- குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
- குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
- குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
- குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்ட வீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா?
குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
- குரைக்கிற நாய் கடிக்காது.
குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
- குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
- குறைகுடம் கூத்தாடும்.
- குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
- கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்.
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
- கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
- கூரையில சோத்த போட்டா ஆயிரம் காக்கா.
- கூழானாலும் குளித்துக் குடி.
- கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
- கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
- கெடுவான் கேடு நினைப்பான்.
- கெண்டையைப் போட்டு வராலை இழு.
- கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
- கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
- கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
- கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
- கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
- கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல.
- கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி.
- கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
- கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?
- கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்.
- கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
- கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
- கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
- சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
- சர்க்கரை என்றால் தித்திக்குமா?
- சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்படமாட்டான்.
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.
- சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
- சாண் ஏறினால் முழம் வழுக்கும்.
- சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்.
- சித்திரமும் கைப்பழக்கம்.
- சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லை, ஐப்பசி மாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை.
- சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
- சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
- சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
- சிறுவர் இட்ட வெள்ளாமை விளஞ்சாலும் வீடு வந்து சேராது.
- சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
- சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈ ச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
- சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
- சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
- சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
- சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
- சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
- சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
- சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
- சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது.
- சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
- தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்.
தடி எடுத்தவன் தண்டக்காரன்.
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
- தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
- தம்பியுடையான் படைக்கஞ்சான்.
- தருமம் தலை காக்கும்.
- தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
- தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
- தன் கையே தனக்குதவி.
- தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
- தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
- தனக்கு மிஞ்சித் தான் தருமம்.
- தன்னைப்போல் பிறரை நினை.
- தனிமரம் தோப்பாகாது.
- தாட்சண்யவான் தரித்திரவான்.
- தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.
- தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
- தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
- தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
- தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
- தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
- தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
- தானாடா விட்டாலும் சதையாடும்.
- தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
- தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
- துணை போனாலும் பிணை போகாதே.
- துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
- தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
- தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
- தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்தகம்.
- தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்.
தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்.
- தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
- தோல்வியே வெற்றியின் முதல் படி.
- நக்குற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
- நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
- நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
- நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடு கேக்குமாம்.
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
- நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி.
- நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.
- நாய் வாலை நிமிர்த்த முடியாது.
- நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
- நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி.
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.
- நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
- நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
- நிழலின் அருமை வெயிலிலே.
- நிறை குடம் நீர் தளும்பாது.
- நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
- நுணலும் தன் வாயால் கெடும்.
- நெருப்பில்லாமல் புகையாது.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை.
- பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
- பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
- பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
- படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
- படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்.
- படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.
- பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
- பணம் பத்தும் செய்யும்.
- பணமில்லாதவன் பிணம்.
- பதறாத காரியம் சிதறாது.
- பதறிய காரியம் சிதறும்.
- பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
- பருவத்தே பயிர் செய்.
- பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.
- பல துளி பெரு வெள்ளம்.
- பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
- பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- பழம் பழுத்தால் கொம்பிலே தங்காது.
- பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
- பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
- பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
- பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
- பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
- பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
- பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
- பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
- பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
- பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
- பாம்பாட்டிக்குப் பாம்பாலே சாவு , கள்ளனுக்குக் களவிலே சாவு .
- பாம்பின கால் பாம்பறியும்.
- பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
- பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
- பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
- பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
- பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
- பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
- பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.
- பானை பிடித்தவள் பாக்கியசாலி.
- பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
- பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .
- பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
- பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
- புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
- புத்திமானே பலவான்.
- புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
- புயலுக்குப் பின்னே அமைதி.
- புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
- புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
- புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
- பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.
- பூசணிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான்.
- பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
- பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
- பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
- பெண் என்றால் பேயும் இரங்கும்.
- பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
- பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
- பெண்ணென்று பிறந்த போது புருஷன் பிறந்திருப்பான்.
- பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
- பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
- பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
- பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
- பேராசை பெரு நஷ்டம்.
- பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
- பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
- பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
- பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
- பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
- பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்.
- பொறுமை கடலினும் பெரிது.
- பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
- போகாத ஊருக்கு வழி எது?
- போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
- போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
- போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
- மடியில் கனமிருந்தால் வழியில் பயம்.
- மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம்.
- மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
- மண்டையுள்ள வரை சளி போகாது.
- மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
- மதில் மேல் பூனை போல .
- மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
- மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
- மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
- மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
- மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
- மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
- மனம் உண்டானால் இடம் உண்டு.
- மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
- மனமிருந்தால் மார்க்கமுண்டு
- மனமுரண்டிற்கு மருந்தில்லை.
- மன்னன் எப்படியோ மன்னுயிர் அப்படி.
- மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
- மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
- மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
- மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
- மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
- மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம்.
மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்.
- மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
- மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
- மாரி யல்லது காரியம் இல்லை.
- மாவுக்குத் தக்க பணியாரம்.
- மாற்றானுக்கு இடங் கொடேல்.
- மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
- மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
- மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
- மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
- மீ தூண் விரும்பேல்.
- முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
- முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
- முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
- முதல் கோணல் முற்றுங் கோணல்.
- முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
- முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
- முருங்கை பருத்தால் தூணாகுமா?
- முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
- முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
- முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
- முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும்.
- முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
- முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
- முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
- மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
- மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி
- வாழ்ந்தவனுமில்லை.
- மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
- மெளனம் மலையைச் சாதிக்கும்.
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
- மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
- மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
- யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
- யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
- யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
- யானைக்கும் அடி சறுக்கும்.
- யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.
- வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
- வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
- வட்டி ஆசை முதலுக்கு கேடு.
- வரவு எட்டணா செலவு பத்தணா.
- வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
- வருந்தினால் வாராதது இல்லை.
- வருமுன் காப்பதறிவு.
- வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
- வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
- வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
- வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
- வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு.
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
- வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ.
- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
- வாழ்வும் தாழ்வும் சில காலம்.
- வாழு, வாழ விடு.
- விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பன்.
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
- விதி எப்படியோ மதி அப்படி.
- விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
- விரலுக்குத் தக்கதே வீக்கம்.
- விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
- விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
- விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
- வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
- விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
- விழுந்தவன் சிரித்தான் வெட்கத்திற்கஞ்சி.
- விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
- விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
- விளையாட்டு வினையாயிற்று.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- வீட்டில் எலி வெளியில் புலி.
- வெட்டு ஒன்று துண்டிரண்டு.
- வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
- வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
- வெள்ளம் வருமுன் அணை போடு.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
- வெளுத்ததெல்லாம் பாலாகுமா, கறுத்ததெல்லாம் தண்ணீராகுமா?
- வெறுங்கை முழம் போடுமா?
- வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
- வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
- வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்.
வேலிக்கு ஓணான் சாட்சி.
- வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?
- வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
- ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது.