கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! - அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!
(கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்
சுட்டுச் சுட்டு கொன்றன கண்கள்! - நான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு...!
(கட்டி)
தங்கரதம் போல் வருகிறாள் - அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள் - இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.
காலையில் மலரும் தாமரைப்பூ! -அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ!...அவள்
என்றும் மணக்கும் முல்லைப்பூ!
(கட்டி)
No comments:
Post a Comment