கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா - நீட்டி கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா? வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா - கூனி வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா? (பாத்தா)
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு - இவரு போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு - ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு (பாத்தா) அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா - அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா? பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா - இந்தப் பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா? (பாத்தா)