google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: February 2010

Sunday, February 28, 2010

Easy tips to save time and cooking gas

சமையல் கேஸ், நேரம் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தும் எளிய வழிகள்

  • பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
  • அடி பெருத்த பாத்திரத்தில் சமைக்கவும்.
  • சிறிய பர்னரைப் பயன்படுத்தவும்.
  • பாத்திரத்திற்கு வெளியே தீ தெரியாவண்ணம் குறைவாகவே இருக்கட்டும்.
  • ஊறவைத்து வேகவைக்கவும்.
  • சமையலின் இடையில் தேவையான பொருட்களைத் தேடாமல் முன்கூட்டியே அருகில் வைத்துக் கொள்ளவும்.
  • வேண்டிய அளவு நீரை மட்டும் சேர்த்தால் போதுமானது.
  • பாத்திரத்தை மூடிவைத்துச் சமைக்கவும்.
  • சமைக்கத் தொடங்குவதற்கு வெகு முன்னதாகவே குளிரூட்டும் பெட்டியிலிருந்து தேவைப்படும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • சமைத்தபின் முடிந்தவரை எல்லோரும் சீக்கிரமாகச் சாப்பிட்டு விடவும்.

Hair tips தலைமுடி டிப்ஸ்

ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான, கருத்த கூந்தல் அமையப் பெற சில எளிய வழிகள்







முடி உதிர்தல்
  • வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் வேகவைத்து ஆறியபின் அந்த நீரால் தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.



புழுவெட்டு
  • நவச்சாரத்தைத் தேனில் கலந்து தடவினால் முடிகொட்டுவது நிற்கும்; புழுவெட்டு மறையும்.



வழுக்கை
  • கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை
  • நெல்லிக்காயை அடிக்கடி உண்டால் இளநரை மாறும்.

முடி கருப்பாக
  • நெல்லிக்காயைத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து அந்த எண்ணையைத் தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.



முடி நன்கு வளர
  • அரைத்த கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.