- பாதங்களைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
- வெறுங்காலில் நடக்காதீர்கள்.
- பப்பாளி பழத்தை நன்கு அரைத்து வெடிப்புகளில் தேய்த்து உலர விடவும். பிறகு தண்ணீரால் கழுவவும்.
- மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்புகளில் தேய்த்து உலர விடவும்.
- இதமான வெந்நீரில் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் உப்பையும் கலந்து பாதங்களைச் சிறிது நேரம் ஊறவைத்து, சொரசொரப்பான கல்லில் தேய்த்துக் கழுவவும்.
- கால் பாதத்தில் லேசான எண்ணெய்ப் பசை இருப்பதுபோல் பார்த்துக்கொண்டால் பித்தவெடிப்பு வராது.
- தூங்குவதற்கு முன் பாதங்களில் சிறிது எண்ணெய் தடவி சாக்ஸ் அணிந்து கொண்டால் நல்லது.
- பகலில் ஷூ அணிந்தால் நன்று.
http://severaltips.blogspot.com/2008/10/home-treatment-for-cracked-feet-heel-to.html
No comments:
Post a Comment