google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: December 2017

Friday, December 22, 2017

Honey Gooseberry

Honey Gooseberry is rich in Vitamin C and Iron.
தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்: 
நெல்லிக்காய் - 1 கிலோ
பால் - இரண்டு கரண்டி
வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கிலோ

செய்முறை:
1. ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதில் பரப்பி வையுங்கள். வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

2. பால் கலந்த தண்ணீர் சூடானதும், நெல்லிக்காய் பரப்பிய இட்லி தட்டுகளை வைத்து, இட்லி பானையை மூடி அவித்து எடுக்கவும்.

3. அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம் என்றால் சுமார் ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவாக சேர்பவர்களுக்கு. இனிப்பு அதிகம் வேண்டும் என்றால் ஒரு கிலோ வெல்லம் சேர்க்கலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சுங்கள்.

4. அதிகம் காய்ச்சாமல், பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் இறக்கி விடவும். இதில் வெந்த நெல்லிக்காயைப் போட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுங்கள்.

5.  தினமும் எடுத்து சாப்பிடுங்கள். மீதமிருக்கிற பாகை குடிக்கலாம்.