google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: January 2011

Saturday, January 29, 2011

Are they true?

Are they true?

Getting good spouse
Astrology and marriage
Good or bad husband or wife
Horoscope predicts quality of spouse
Delay in wedding
Delay getting married
Delay in getting married?
Delayed marriage
Reasons for delay in marriages

மனைவியோ கணவனோ அமைவது
(ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே விதி)

·        ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.
·        சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான்.
·        ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்.
·        ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்.
·        ஏழாம் வீட்டிற்கு உரியவன்  திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
·        ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
·        சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்.
·        சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
·        சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படும்  ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
·        ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபதி சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனாக இருப்பான்.
·        லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
·        சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்.
·        ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்.
·        இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
·        ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவி. உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
·        லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
·        ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்.
·        சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
·        ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
·        நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
·        ஏழாம் அதிபதி பாப கிரகமாகி, ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
·        ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
·        ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
·        சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
·        காதலுக்கு மென்மையான உணர்வும்,  நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
·        சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை.
·        ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக் கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
·        அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மணவாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்.
·        ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
·        குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவை  ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்.
·        அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்திருந்தால் மணவாழ்க்கை சிறக்காது.
·        அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்களும், லக்கின அதிபதியும்ஏழாம்அதிபதியும்,  மறைவிடங்களில்,  அதாவது 6,8,12 ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது..
·        இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டுவிட்டு வேலையின் பொருட்டு வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள்ள நேரிடும். 
·         செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம்,    சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
·        ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி.
·        1, 4, 7, 10 ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப்பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
·        7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
·        கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
·        மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் அவள் யோகமான பெண்தான்.
·        கும்ப லக்கினத்தில் பிறந்து,  4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
·        எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
·        திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

திருமண யோகத்திற்கு எதிரானவை

  • லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
  • ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திற்கு இருபக்கத்திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்.
  • சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும்,  தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
  • சுபக்கிரகங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
  • குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
  • சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது.
  • ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல.
  • ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல.
  • எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல.
  • ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல.
  • ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல.
  • எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல.

திருமணத் தாமதம் /  திருமணத் தடை

  • ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும், வக்கிரகதியில் இருந்தாலும், அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
  • ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி சேர்ந்துள்ள அமைப்பு திருமணம் தாமதப்படும்.
  • ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
  • ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல்  சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
  • அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல்  சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
  • சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
  • சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
  • ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
  • ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்.
  • மிதுனம், சிம்மம், அல்லது கன்னி ராசி ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி இருந்தால் திருமணம் தாமதப்படும்.
  • சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம், சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் திருமண வாழ்வு வேண்டாம் எனக் கூறக்கூடும்.

ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் மாறலாம்.

Wednesday, January 26, 2011

108 Saranagosham

  
1. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. ஓம் ஷக்தி வடிவேலவன் சோதரனே சரணம் ஐயப்பா
5. ஓம் மாளிகப்புரத்து மஞ்சம்மதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா
6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. ஓம் பெரிய கடுட்ட சுவாமியே சரணம் ஐயப்பா
9. ஓம் சிறிய கடுட்ட சுவாமியே சரணம் ஐயப்பா
10. ஓம் வதேவதமா சரணம் ஐயப்பா
11. ஓம் துர்கா பகவதிமாரே சரணம் ஐயப்பா
12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. ஓம் அனர்த்த ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. ஓம் அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. ஓம் அழுதையில் வாசனே சரணம் ஐயப்பா
22. ஓம் ஆர்யங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஓம் அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. ஓம் இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. ஓம் இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஓம் ஏக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. ஓம் இதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. ஓம் எருமேலி வாழும் கிராட -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. ஓம் எங்கும் நிறைந்த நாத பிராமம்மே சரணம் ஐயப்பா
42. ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஓம் ஐந்து மலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஓம் யங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம் ஓம்கார பராபரமே சரணம் ஐயப்பா
50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53.ஓம் கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா
54. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
55. ஓம் சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. ஓம் சத்ரு சம்கார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. ஓம் சரணாகதத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. ஷபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஓம் ஷம்புகுமாரனே சரணம் ஐயப்பா
61. ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. ஓம் பக்த வட்சலனே சரணம் ஐயப்பா
73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
78. ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. ஓம் வாசனே சரணம் ஐயப்பா
80. ஓம் குலத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. ஓம் கைவல்ய பட டாயகனே சரணம் ஐயப்பா
83. ஓம் ஜாதி  பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. ஓம் சேவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. ஓம் துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா
87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. ஓம் தேவர்கள் துயரம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. ஓம் நாராயன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. ஓம் நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. ஓம் பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. ஓம் பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. ஓம் பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
95. ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. ஓம் வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
97. ஓம் பாகவடோட்டமனே சரணம் ஐயப்பா
98. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. ஓம் மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
103. ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. ஓம் சர்வரோக நிவாரகனே சரணம் ஐயப்பா
105. ஓம் சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
106. ஓம் சர்வாப்தீச்த தாயகனே சரணம் ஐயப்பா
107. ஓம் சாச்வதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா