google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: June 2010

Wednesday, June 30, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!


ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!


அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

Wednesday, June 23, 2010

ஆய்வுப் பொருண்மைகள்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு



மாநாட்டுப் பொருண்மை

"தற்கால உலகில் தமிழ்ச் செம்மொழி"


முகப்பரங்கம்
1. தற்கால உலகில் தமிழ் இலக்கியங்கள்
2. தற்கால உலகில் தொல்காப்பியம்
3. தற்கால உலகில் திருக்குறள்

தனிப் பொழிவரங்கம்
1. சங்ககால அரசியலில் புலவர்கள்
2. சங்ககால வாழ்வியல்
3. தலித் இலக்கியம்
4. பெண்ணியம்
5. ஆட்சித் தமிழ்

கலந்துரையரங்கம்
1. தமிழ்வழிக் கல்வி
2. அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளும் தமிழ் மொழி இலக்கியக்
காலக் கணிப்புகளும்
3. காலத்திற்கேற்ற தமிழ் மேம்பாடு
4. உலகமயமாதல் சூழலில் தமிழ்
5. மாறிய பாலியம்
6. உலக நாடுகளில் தமிழும் தமிழரும்
7. எழுத்துச் சீர்திருத்தம்
8. இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பு

அமர்வரங்கம்
1. தமிழும் உலகச் செம்மொழிகளும்
2. தமிழ் இலக்கியம்
3. இலக்கணம்
4. மொழியியல்
5. திராவிட மொழியியல்
6. மரபுவழிக் கலைகள்
7. நாட்டுப்புற இலக்கியம்
8. தொல்லியல்
9. கல்வெட்டியல் மற்றும் தொல்லெழுத்தியல்
10. நாணயவியல்
11. அரசியல், சமூக, பொருளாதார வரலாறு
12. ஒப்பிலக்கியம்
13. திறனாய்வு
14. இலக்கியக் கொள்கை
15. அகராதியியல்
16. பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்
17. சுவடிவியலும், பதிப்பியலும்
18. ஊடகத் தமிழ் (தொலைக்காட்சி, வானொலி, மேடை, இதழ்கள்)
19. சமயமும் தமிழும்
20. மொழிசார் இயக்கங்கள்
21. மொழிபெயர்ப்பு
22. மொழிக் கல்வி
23. தமிழகப் பழங்குடி மொழிகள்
24. தமிழும் மெய்யியலும்
25. சிறுவர் இலக்கியம்
26. புதிய இலக்கிய வகைகள்
27. தமிழும் பிற இந்திய மொழிகளும்
28. கலை, இலக்கியப் பண்பாட்டு வரலாறு
29. படைப்பிலக்கியம்
30. வட்டார வழக்குகளும் தகுநிலை வழக்கும்
31. சொற்பிறப்பியல்
32. கலைச்சொல்லாக்கம்
33. சமுதாய அறிவியல்
34. மொழிசார் அரசியல்
35. மரபுவழி அறிவியல்
36. தமிழ்த் திரைப்படங்கள்
37. ஆவணப் படங்கள்
38. தமிழிசை
39. கணினித் தமிழ்
40. சூழலியலும் தமிழும்
41. கட்டுமானக்கலை
42. தமிழ் மருத்துவம்
43. சிற்பக் கலை
44. பெண்ணியம்
45. தலித்தியம்
46. நுண்கலைகள்
47. நூல் பாதுகாப்பு
48. ஆவணத் தமிழ்
49. சிற்றிதழ்கள்
50. சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துக்களும் - திராவிடத் தொடர்புகள்
51. அறிவியலும் தமிழும்
52. ஊர்ப் பெயராய்வு
53. நாடகவியல்
54. உரையாசிரியர்கள்
55. மொழி மேலாண்மை

World Classical Tamil Conference, Kovai-2010

Theme of World Classical Tamil Conference, Kovai-2010

The Academic programme consists of plenary sessions, symposia, special lectures and presentation of papers.


Subject Areas for the seminar


1. Tamil and world classical language

2. Tamil Literature

3. Grammar

4. Linguistics

5. Dravidian Linguistics

6. Traditional Arts

7. Folk Literature

8. Archaeology

9. Epigraphy and Paleography

10. Numismatics

11. Political and Socio - Economic History

12. Cultural Studies / Comparative Literature

13. Literary Criticism

14. Literary Theory

15. Lexicography

16. Tamil Creative Literature in foreign countries

17. Manuscriptology and Editing

18. Media and Tamil

19. Religion and Tamil

20. Language Movements

21. Translation

22. Language learning

23. Tribal Languages in Tamilnadu

24. Tamil and Philosophy

25. Children Literature

26. New literary genres

27. Tamil and other Indian Languages

28. History of arts, Literature and Culture

29. Creative literature

30. Dialects and Standard Language

31. Etymology

32. Terminology

33. Social Sciences

34. Language Politics

35. Traditional Sciences

36. Tamil Cinema

37. Documentary films

38. Tamil Music

39. Tamil Computer

40. Ecology and Tamil

41. Architecture

42. Siddha Medicine

43. Sculpture

44. Feminism

45. Dalitism

46. Fine Arts

47. Preservation of Books

48. Documentation

49. Little Magazines

50. Indus Civilization and Scripts - Dravidian Connections

51. Science and Tamil

52. Place Names studies

53. Drama

54. Commentators

55. Language Management

Tuesday, June 22, 2010

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்குங் காணோம்

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் , ஒருசொற் கேளீர்

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.



பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்லுவதிலோர் மகிமை யில்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.



- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வாழ்க! வாழ்க!!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்என்பது குறித்து தூர்தர்ஷன் டிவிமற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:


இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், “செம்மொழிஎன அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.


உலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், “கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.


தமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.


மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது. தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.


பல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மை உடையன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

பலன்கள்:
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.