google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Road accident

Monday, August 24, 2009

Road accident

சாலை விபத்து


எதிரே வருபவர் எமன்
எனக் கெதிரே வருபவர் எவரென்றாலும்
எதிரே வருபவர் எமன் - இது
புதிரல்ல புது ஞானம்.

மெதுவாய் பைக்கில் போனேன்
அழகாய் மனைவி என் முதுகின் பின்னே
வந்தது குறுக்கே திடீரென்று, அப்படி
வரக்கூடாத ஒரு டூவீலர்.

கண்ணிமைக்கும் நேரத்திலே
கடினமாய் மோதிய வேகத்திலே
அதிர்ந்தது ரோடு; கூடியது ஊரு
சொறுகின என் கண்கள்; எங்கே என் துணைவி?

நெஞ்சடி எனக்கு
இடுப்படி அவளுக்கு
பொடிப்பொடியாயின
பைக்கின் பாகங்கள்.

கூடிய மக்கள் நல்லவர்கள் - சும்மா
வேடிக்கை பார்க்கவே இல்லை அவர்கள்
உடனடி உதவிகள் செய்து - நாங்கள்
உயிர் பிழைத்திருக்க வைத்தவர்கள்.

அன்று நடந்தது விபத்து
என்று தொலையும் இந்த ஆபத்து
சாலையில் கவனம் செலுத்து என்றேன்
சாலை விதிகளை மதிப்போம் என்றேன்.

அதுமுதல் என் மனம் சொல்கிறது
கவனம் கவனம் கவனம்
எதிரே திடீரென வருவர்
காற்றினும் கடுகி மறைவர்.

கவனம் தேவை எப்போதும்
எதிரே வருபவர் எமன்!

5 comments:

Muniappan Pakkangal said...

A nice tips but a bad experience,Hope you & your Mrs have recovered.

Information said...

Thank you.

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு... நல்ல ஆலோசனை

Ramasubramanian said...

Nalla alochanai. Ellorum chalaiyil adi gavanamaga ottavendiyathu avasiyam

நிகழ்காலத்தில்... said...

பின்னே அமர்ந்திருப்பது தேவதை எனில் முன்னே வரும் எமன் சாதாரணம் :)))